பொதுவாக நாம் வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு என்ன செய்வோம்? குட்டித் தூக்கம் போடுவோம் அல்லது ஒரு கப் டீயோ, காபியோ குடிப்போம். ஒரு சில ஆண்கள் சிகரெட் அடிப்பார்கள். ஆனால், ஒரு சிலர் உணவு உட்கொண்ட பின் குளிப்பதையே வழக்கமாக வைத்திருப்பார்கள். இது தான் இருப்பதிலேயே மிகவும் மோசமான பழக்கம் மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பழக்கமும் கூட.
வீட்டில் பெரியவர்கள் இருந்தால், சாப்பிட்ட உடனேயே உங்களை குளிக்க விடமாட்டார்கள். சாப்பிட்டதும் குளிக்கக்கூடாது என்று அவர்கள் பலமுறை சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஏன் என்று அவர்களிடம் காரணம் கேட்டால், நல்லதல்ல என்று மட்டும் சொல்வார்கள். அப்படி அவர்கள் சொல்வதற்குப் பின் எந்த ஒரு ஆன்மீக காரணமும் இல்லை. ஆனால் உடல் இயக்கம் சார்ந்த அறிவியல் காரணம் மட்டும் உள்ளது.
செல்கள் புத்துணர்வு
குளிக்கும் போது நம் உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியடையும். கடந்த 24 மணிநேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேற்றப்படும். இப்படி வெளியேற்றும் போது, உடலினுள் உள்ள செல்கள் மிகவும் ஆற்றலுடனும், புத்துணர்வுடனும் இருக்கும். இதனால் தான் குளித்து முடித்ததும் பசி ஏற்படுகிறது.
ரத்த ஓட்டம்
குளிக்கும் பொழுது தோல் பகுதியில் வெப்பநிலை மாற்றம் நிகழ்கின்றது அதை சரி செய்ய உடல் முழுவதிலுமிருந்து ரத்தம் தோல், மற்று சதை பகுதிக்கு அதிகமாக திருப்பிவிடப்படுகிறது. ஆகவே சாப்பிட்டுவிட்டு குளிக்கும்பொழுது குடல் பகுதில் ரத்த ஓட்டம் குறைபட்டு உண்ட உணவை ஜீரணிக்கவும், உணவிலுள்ள சத்துக்களை பிரித்தெடுக்கவும் தேவையான ரத்த ஓட்டம் குடல்களுக்கு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் ஏற்பட வழிவகுக்கும்.
ஜீரணிக்க நொதிகள்
உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது. இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கும். எனவே உண்டபின் குளிக்கக் கூடாது.
Read More: உணவு சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்..
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை
உணவு உட்கொண்ட உடனேயே குளித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.
குளிக்க போகும் முன், kulikka pogum mun indha oru visahayathai mattum seiiyaadhinga, eating before taking bath, good habit, bad habit, tips in tamil
Social Plugin