தேங்காய்ப்பால் மோர் கரைசலின் பயன்கள்
- பயிர்கள் நன்கு செழித்து வளரும்
- பூச்சிகளை விரட்டும் குணம் கொண்டது
- பூஞ்சாண நோயை தாங்கி வளரும்
- பயிர்களில் பூக்கும் திறனை அதிகரிக்கும்
- பூ, பிஞ்சுகள் அதிகம் பிடிக்கும்
- தரமான காய்கள் கிடைக்கும்
- சந்தையில் அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது
- வெளி மார்க்கெட்டிற்கு கொண்ட சென்றால்காயின் தன்மை மாறாமல் இருக்கும்
தேங்காய்ப்பால் மோர் கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள்:
1. மண்பானை - 1
2. நன்கு புளித்த மோர் -5 கிலோ
3. தேங்காய் - 10
4. தண்ணீர் - 5 லிட்டர்
2. நன்கு புளித்த மோர் -5 கிலோ
3. தேங்காய் - 10
4. தண்ணீர் - 5 லிட்டர்
தேங்காய்ப்பால் மோர் கரைசல் தயாரிக்கும் முறை:
முதல்படி
முதலில் ஒரு மண்பானையை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதில் 10 தேங்காயையும் உடைத்து துருவி ஆட்டி 5 லிட்டர் தண்ணர் கலந்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காய் உடைத்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தேங்காய்ப்பால் மோர் கரைசல் இரண்டாம்படி
மண்பானையில் நன்கு புளித்த மோர் 5 லிட்டர் மற்றும் தேங்காய்பால் 5 லிட்டர் இரண்டையும் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.கந்து 7 நாட்கள் வரை ஊறவிட்டு தினமும் கலக்கி விட வேண்டும்.
தேங்காய்ப்பால் மோர் கரைசல் மூன்றாம்படி
7 நாட்களுக்கு பிறகு ஊறவைத்த கரைசலை எடுத்து 1 லிட்டர் கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் ( 1 : 10) என்ற விகிதத்தில் கலக்க வேண்டும்
பயன்படுத்தும் பயிர்கள்
அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
பயன்படுத்தும் அளவுகள்
( 1 : 10 ) என்ற விகிதத்தில் கலந்து வைத்த கரைசலை அனைத்து வகை பயிர்களுக்கும் தெளிக்கலாம்.
தெளிக்கும்போது பயிர்களில் நன்கு நனையுமாறு மாலை வேளையில் தெளிக்க வேண்டும்
பூ பூக்கும் சமையத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
தெளிக்கும்போது பயிர்களில் நன்கு நனையுமாறு மாலை வேளையில் தெளிக்க வேண்டும்
பூ பூக்கும் சமையத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
via @Madhu Balan
iyarkai velanmai, Vivasayam, iyarkai vivasayam, thengai paal mor karaisal thayarikkum murai, payangal, natural farming, organic farming tips tricks techniques in tamil
Social Plugin