Type Here to Get Search Results !

கிடப்பில் போடப்பட்டிருக்கும் இந்த 20 நீர் மேலாண்மை திட்டங்களுக்காகவும் போராடுவோம்...

கிட்டத்தட்ட 20  நீர் மேலாண்மை திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கு. இத ஏன் எந்த அரசாங்கமும் செய்யல.  
neer melanmai thittangal, water management projects failed in tamilnadu by politicians, Protest for water in tamilnadu, save TN farmers

இந்த ஜல்லிக்கட்டு எவ்வளவு முக்கியம்னு இப்பத் தெரிஞ்சிருக்கும். இந்த போராட்டத்தை இதோடு நிறுத்திவிடாமல் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாக இருக்கிறது. 
விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் பிரச்சனைகளும் பேசப்பட வேண்டும்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளான்னு தண்ணிக்குக் கெஞ்சிகிட்டு இருக்கோம். தமிழ்நாட்டுல இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசு என்ன செஞ்சிருக்கு?
அவினாசி அத்திக்கடவுத் திட்டம், உபரிநீர்த்திட்டம்னு கிட்டத்தட்ட 20 திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கு. இத ஏன் எந்த அரசாங்கமும் செய்யல
எடுத்துக்காட்டாக அவினாசி அத்திக்கடவு திட்டம் 1000 ஏக்கர் விவசாயத்துக்குப் பயன்படும். ஆனா 60 வருசமா கிடப்பில் போடப்பட்டிருக்கு தாமிரபரணி திட்டம் மேற்கொள்ளப்பட்டால் நாம எந்த மாநிலம்கிட்டயும் கையேந்த வேண்டாம். இந்த இருபது திட்டங்களை நிறைவேத்த 40000 கோடி போதும். ஆனால் இந்த அஞ்சு வருசத்துல மட்டும் 65000 கோடி இலவசங்களுக்காக செலவு பண்ணப்பட்டிருக்கு இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன? இலவசத்தின் பின்னால் நம்மை ஓடவிட்டுக் குளிர்காய்வதுதான் அரசியல்வியாதிகளின் நோக்கமா?
இளைஞர்கள் விவசாயிகளுக்காகவும் நீர் மேலாண்மைக்காகவும் போராட வேண்டும். நம் பாரம்பரிய விவசாயமுறைகள், நெல் வகைகள் ஜல்லிக்கட்டுக்கு நிகரானவையே!
தமிழகம் தலைநிமிர சேர்ந்து குரல் கொடுப்போம். விவசாயத்தைக்காப்போம். ஜல்லிக்கட்டு நடத்துவோம். கூடுமானவரை இந்த தொடர்கீச்சை பகிருங்கள். நன்றி! 


Awareness, Jallikattu Protest, Makkal movement, Poraduvom, Save TN Farmers, Vivasayam,  neer melanmai thittangal, water management projects failed in tamilnadu by politicians, Protest for water in tamilnadu, save TN farmers