வேளாண்மைத் துறையில் பல்வேறு சுய வேலை வாய்ப்புகள் உள்ளன.
வேளாண்மை
துறைக்கு இளைஞர்கள் முன்னுரிமை அளித்து அதன் மூலம் பல
தொழில்கள் தொடங்கி வருவாய் ஈட்ட வேண்டும். அதற்காக கோவை வேளாண்
பல்கலைக் கழகம் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகின்றது. ஒவ்வொரு மாதத்தின்
5, 6, 7 மற்றும் 16-ம் தேதிகளில் ஒரு நாள் இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது.
5-ஆம் தேதி காளான் வளர்ப்புப் பயிற்சி:
ஒவ்வொரு மாதத்தின் 5-ஆம் தேதிகளில் கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் காளான் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி மையத்தால் காளான் வளர்ப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.
அதற்கு பயிற்சிக் கட்டணம் ரூ.150.
6-ஆம் தேதி தேனீ வளர்ப்பு பயிற்சி:
ஒவ்வொரு மாதத்தின் 6-ஆம் தேதிகளில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி கோவை வேளாண் பல்கலைக்
கழகத்தின் என்டமாலஜி துறையின் சார்பாக நடத்தப்படுகிறது. அதற்கு பயிற்சிக்
கட்டணம் ரூ.150.
7-ம் தேதி ஆர்கானிக் விவசாயப் பயிற்சி:
ஒவ்வொரு மாதத்தின் 7-ம் தேதிகளில் ஆர்கானிக் விவசாயம் குறித்த பயிற்சி கோவை வேளாண் பல்கலைக் கழகத்தால் நடத்தப்படுகிறது.
இதற்கு பயிற்சி கட்டணம் ரூ.500.
16-ஆம் தேதி மருத்துவச் செடிகள் வளர்ப்பு பயிற்சி:
ஒவ்வொரு மாதத்தின் 16-ஆம் தேதிகளில் மருத்துவ செடிகள் வளர்ப்பு குறித்த பயிற்சி கோவை வேளாண் பல்கலைக் கழகத்தால் நடத்தப்படுகிறது. இதற்குப் பயிற்சி கட்டணம் இல்லை.
மேலும் விவரங்களுக்கு:
Tamil Nadu Agricultural University,
Lawley Road,
Coimbatore - 641003
Phone: 0422-6611365
சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள், suya velai vaippu payirchi coimbatore agricultural university training, bee keeping, mushroom organic farming, medicinal plants, monthly training details, self employment training courses, suya tholil vaippu
கோவை வேளாண் பல்கலைக் கழகம் மாதம் தோறும் வழங்கும் சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் குறித்த தகவல்
Tags
Social Plugin