செய்ய தேவையான பொருட்கள்:
- நெறிஞ்சில் [Nerunjil - Tribulus terrestris],
- பனங்கற்கண்டு,
- திரிபலா சூரணம்(நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்) [triphala suranam].
செய்முறை: நெறிஞ்சில் செடியின் இலை, தண்டு, பூக்கள் ஆகியவற்றை துண்டுகளாக்கி எடுத்துக்கொள்ளவும் அதனுடன் சிறிது பனங்கற்கண்டு, ஒரு ஸ்பூன் திரிபலா சூரணம் சேர்க்கவும். அதனுடன் ஒரு டம்ளர் அளவுக்கு ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதை வடிகட்டி காலை, மாலை இருவேளை குடித்துவர கண் எரிச்சல் காணாமல் போகும். கண் சிவப்பு மறைந்து போகும். கண்களுக்கு தெளிவு ஏற்படும்.
நெறிஞ்சில் மருத்துவ குணங்கள்:
மஞ்சள் நிற பூக்களை கொண்ட நெறிஞ்சில் அற்புதமான மருந்தாக விளங்குகிறது.- இது கண்களில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது.
- உடலுக்கு குளிர்ச்சி தருகிறது.
- மஞ்சள் காமாலை நோயை குணமாக்கும் தன்மை கொண்டது.
- கண் பிரச்னைகளுக்கு மருந்தாகிறது.
- கண்கள், ஈரலுக்கு பலம் கொடுக்க கூடியது.
- ரத்தத்தை சுத்திகரிக்கும்.
- சிறுநீர் பாதையில் இருக்கும் கற்களை கரைக்க கூடியது.
- சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்க கூடியது.
Social Plugin