Type Here to Get Search Results !

கல்லீரல் கொழுப்பு என்றால் என்ன? அதன் அறிகுறிகள், காரணங்கள் யாவை? - (Fatty Liver)

கல்லீரல் கொழுப்பு, கல்லீரல் நோய்கள், அறிகுறிகள், வீக்கம் குறைய, கல்லீரல் கொழுப்பு குறைய, kalleeral noi, kalleeral veekam in tamil, kalleeral function, kalleral veekam, Fatty liver symptoms in tamil, enlarged fatty liver
நாம் உண்ணும் உணவினை கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு என்று பகுத்து ஆராய்ந்து பிரித்து, அதன் மூலம் சத்துகளையும் சக்தியையும் தருவது கல்லீரல்தான். உணவின் செரிமானத்துடன், நச்சுத்தன்மையை வெளியேற்றுவதிலும் கல்லீரலின் பங்கு மகத்தானது.

தேவைக்கும் அதிகமாக நம் உடலுக்குக் கிடைக்கிற கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்ற உணவுகள் கொழுப்பாக மாறி கல்லீரலில் தங்குவதையே கல்லீரல் கொழுப்பு(Fatty liver) என்கிறோம்.

கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்...


கல்லீரலில் ஏற்படும் கொழுப்பு படிவானது எந்தவொரு அறிகுறிகளையும் காட்டாது வளர்ந்து கொண்டிருக்கும் நன்றாக படிந்த பின் தான் அதன் குணத்தைக்காட்டும். கல்லீரல் கொழுப்பு என்ற இந்த பிரச்சனையினால் தேவையில்லாத கொழுப்புகள் கல்லீரலில் சேர்ந்து, அந்த உறுப்பை நிரந்தரமாக பாதித்து விடுகின்றன. இந்த நோயினால் ஏற்படும் எரிச்சலால், கல்லீரலில் தழும்புகள் ஏற்படவும் மற்றும் அதன் தசைகளை கடினப்படவும் செய்து விடுகிறது.

கல்லீரலில் கொழுப்பு படிவினால் ஏற்படும் ஆரம்ப அறிகுறிகள்.

  1. ஆடிக்கடி வயிறு ஊதுதல் (உப்பிசம்)
  2. பசியின்மை
  3. எடை குறைதல் (உடல் உழைப்பின்றி ,காரணமின்றி)
  4. களைப்புத்தன்மை (சோர்வு)
  5. சாதுவான வயிற்று வலி 
  6. உண்ட உணவு செமிக்க நீண்ட நேரம் எடுத்தல்.
  7. அடித்தொண்டையில் கசப்பு தன்மையை உணர்தல்.
  8. கறுப்பு நிறத்தில் மலம் வெளியேறுவது
40 வயதைத்தாண்டினவர்கள் சற்று கவனமாக மேற் கூறிய அறிகுறிகளில் தென்பட்டால் கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.


கல்லீரலில் கொழுப்பு படிவிக்கான மூல காரணங்கள்

கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்தே வேலை பார்ப்பது போன்ற காரணங்களால் இப்போது கல்லீரல் கொழுப்பு பிரச்னை அதிகமாகி வருகிறது.
  1. அதிகமாக மது அருந்துதல் (Heavy alcoholism).
  2. நொறுக்குத் தீனிகள்.  குழந்தைகள் அடிக்கடி விரும்பி சாப்பிடுகின்ற நொறுக்குத் தீனிகள்
  3. சில நஞ்சுப்பொருட்கள் உட்கொள்ளல் (Toxins).  சில உணவுகளில் ருசிக்காக சில இரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன.
  4. குளிர்பானங்கள்  
  5. பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ்
  6. உணவுப் பொருள் கெடாமல் இருக்க பாவிக்கப்படும் சில இரசாயனங்கள் குறிப்பிட்ட மருந்து வகைகள் (Cretin drugs).
        Aspirin
        Steroids
        Tamoxifen
        Tetracycline

    7. இரத்தத்தில் கொழுப்பின் அளவு பரிந்துரைக்கப்பட்டதை விட அதிகமாக இருத்தல் (High blood Cholesterol).
    8. இரண்டாம் வகையான நீரழிவு (Type 2 Diabetic ).
    9. ஓரே இடத்தில் அதிகநேரமாக இருத்தல் (Obesity).
    10. வைரஸ்.(ஹெப்பாடிட்டீஸ்)
    11. கர்ப்பகாலம் (pregnancy ).
    12. ஊட்டச்சத்து குறைபாடு (Malnutrition)
    13. அனுசேபப் பிணி (Metabolic Syndrome)
    14. ஜீரண மண்டல பாதிப்பு

கல்லீரல் பரிசோதனை:

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள், பருமன் கொண்டவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள் அவசியம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ஹெபடைட்டிஸ் பி, ஹெபடைட்டிஸ் சி பாதிப்பு 20 வயதுகளிலேயே வருகிறது. கல்லீரல் கொழுப்பு பிரச்னை 35 வயதுகளிலேயே பலரிடமும் பார்க்க முடிகிறது. அதனால் எத்தனை சீக்கிரம் பரிசோதனை செய்துகொள்கிறோமோ அந்த அளவு கல்லீரலுக்கு நல்லது.

கல்லீரல் கொழுப்பு, கல்லீரல் நோய்கள், அறிகுறிகள், வீக்கம் குறைய, கல்லீரல் கொழுப்பு குறைய, kalleeral noi, kalleeral veekam in tamil, kalleeral function, kalleral veekam, Fatty liver symptoms in tamil, enlarged fatty liver