Type Here to Get Search Results !

சத்துக் குறைவால் வரக்கூடிய கண் நோய்கள் நீங்க…

சத்துக் குறைவால் வரக்கூடிய கண் நோய்கள் நீங்க, கண் பார்வை தெளிவாக தெரிஎதை சாப்பிடலாம்…


1. சுத்தமான கேரட் 1/4 கிலோ எடுத்து சாறு பிழியவும், கொத்தமல்லி இலைச் சாறு 10 ml, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட் சாறு,
கண் பார்வை குறைபாடு நீங்க, கண் பார்வை அதிகரிக்க, கண் பார்வை தெளிவு பெற, கண் பார்வையை மேம்படுத்தும் வழிகள், கண் பார்வை மங்கல், கண் பார்வை சரியாக, கண் பார்வை தெளிவாக தெரிய, kan paarvai thelivaga theriya, sariyaaga, unavugal, juice thayarippu muraigal
தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 ml) தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இரு வேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாக செய்ய வேண்டும்)

2. பப்பாளிப் பழம் 4 துண்டு, தேங்காய்ப் பால் அல்லது பசும்பால் 1 டம்ளர் (200 ml) தேவையான அளவு பனங்கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.

3. புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 ஸ்பூன் தேன் இவற்றை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு இருவேளை சாப்பிடலாம்.

4. பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம் பழம் அல்லது பலா சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.

5. அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும்.

6. பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெ ல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப் பிட வேண்டும்.

Search tags: 
கண் பார்வை குறைபாடு நீங்க,
கண் பார்வை அதிகரிக்க,
கண் பார்வை தெளிவு பெற,
கண் பார்வையை மேம்படுத்தும் வழிகள்,
கண் பார்வை மங்கல்,
கண் பார்வை சரியாக,
கண் பார்வை தெளிவாக தெரிய..