நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிய உதவும் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பெர்கிலி பூகம்ப ஆய்வு மையம் ‘மைஷேக்' செயலியை உருவாக்கி இருக்கிறது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த செயலி.
‘மைஷேக்' செயலி, நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை பூகம்பத்தைக் கண்டறிய உதவும் சாதனமாக மாற்றுக்கூடியதாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு போன்களுக்காக அறிமுகமாகியுள்ள இந்தச் செயலி ஸ்மார்ட் போன்களில் உள்ள சென்சார்களைக் கொண்டு பூகம்ப அதிர்வுகளை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கை செய்யக்கூடிய சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.
ஸ்மார்ட்போன்களில் இருக்கும், ஆக்சலரோமீட்டர் எனும் அசைவை உணரும் சென்சார்களைத்தான் இந்தச் செயலி மையமாகக் கொண்டிருக்கிறது.
பூமியின் மேற்பரப்பில் புதைக்கப்படும் சென்சார்கள் எப்படி பூகம்பத்திற்கு முந்தைய அதிர்வுகள் உண்டாகும்போது அவற்றை உணர்கின்றனவோ அதே போலவே ஸ்மார்ட்போன் சென்சார்களாலும் பூகம்ப அதிர்வை உணர முடியும்
இந்தப் புதிய செயலி மூலம் நிலநடுக்க ஆபத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு விரைவாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இந்தப் புதிய செயலி சிறிய நிலநடுக்கங்களைக் கூட உணர்ந்துமுன்கூட்டியே எச்சரிக்கை தரவல்லது.
Google Play store Link => Install MyShake app
earth quake alert android app myshake, nilanadukkam kandariya udhavum android seyali, google play store link, My shake android app install on mobile,
Social Plugin