'சத்து மாவு கஞ்சி' செய்முறை - 6 மாதத்திலிருந்து 1 வயதுவறையுள்ள குழந்தைகளுக்க்காக || Sathu Mavu Kanji Recipe for Babies in Tamil || Homemade Health Mix Powder Recipe
குழந்தைகளுக்கு சொத்தோ, வீடோ, செல்வமோ சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ அவர்கள் உருவான நாள் முதலிலிருந்தே ஆரோக்கியத்தை செல்வமாக சேர்த்து வைத்துதர வேண்டும். கண்டதை குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களது உடல் ஆரோக்கியத்தை கெடுக்காமல் அவர்களது உணவை தேர்ந்தெடுத்து கொடுப்பது பெற்றோர்களின் கடமை. அந்த விதத்தில் மிகவும் சத்து நிறைந்த உணவான சத்து மாவு கஞ்சியை குழந்தை பிறந்த 6 மாதத்திலிருந்து 1 வயது வரை கொடுத்து வரவேண்டும். அதை செய்வது எப்படி என காண்போம்.6 மாதத்திலிருந்து 1 வயதுவறையுள்ள குழந்தைகளுக்கு தரவேடிய கேழ்வரகு சத்து மாவு கஞ்சியை தயாரிப்பது எப்படி என காண்போம்.
செய்ய தேவையானவை(Ragi sathu maavu kanji ingredients in tamil):
1. கேழ்வரகு
2. பாசிபருப்பு
3. புழுங்கல் அரிசி
4. உளுந்து
5. பொட்டு கடலை
6. பனை வெள்ளம் (கருப்பட்டி)
இவை அனைத்தையும் சமமான அளவு எடுத்துகொள்ள வேண்டும்.
7. நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயில் 2 ஸ்பூன் அளவு பசு நெய் விட்டு காய்ந்த பிறகு கேழ்வரகு, உளுந்து, பாசி பருப்பு, பொட்டு கடலை, புழுங்கல் அரிசி இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு வருக்க வேண்டும். அதிக நேரம் வருக்க வெடிய தேவை இருக்காது. பருப்பெல்லாம் ரெட்டிஸ் ப்ரௌனாக மாறியதும் ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும் பிறகு அதை மிக்சியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும். பனை வெள்ளத்தை தண்ணீரில் ஊறவைத்து பனைவெள்ள கரைசலாக எடுத்து வைத்துகொள்ள வேண்டும்.
பின்பு ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் ஏற்க்கனவே அரைத்து வைத்த சத்துமாவை கொட்டி கிளறவும். கடைசில் சுவைக்கு கரைத்து வைத்துள்ள பனை வெள்ள கரைசலை சேர்த்து கலந்து கொள்ளவும். சத்து மாவு கஞ்சி ரெடி.
சத்து மாவு கஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள்(health benefits of satthu mavu kanji):
- குழந்தைகளுக்கு ஏற்ப்படக்கூடிய தொற்றும் மற்றும் தொற்றாத நோய்களை தடுக்க கூடிய ஆற்றலை தரும்.
- குழந்தை பிறந்த சிறிது நாட்களிலேயே தேவையான ஊட்டத்தை கொடுத்துவிட்டோமானால் அவர்கள் வளர்ந்து வரும் போது சின்ன சின்ன வியாதிகளிலிருந்து பெரிய வியாதிகள் வரை வராமல் தடுக்க கூடிய ஆற்றலை தர இந்த சத்து மாவு கஞ்சி உதவும்.
- குழந்தைகள் பொதுவாக உணவை குறைவான அளவே சாப்பிட கூடியவர்கள் அப்படி அவர்கள் சாப்பிடும் அளவிலே நிறைவான சத்துக்களை கொடுக்ககூடியது இந்த சத்து மாவு கஞ்சி.
- சத்து மாவு கஞ்சில் சேர்க்கப்பட்டுள்ள கேழ்வரகு, பொட்டுகடலை, பாசிபருப்பு போன்றவைகளில் உள்ள தாதூப்புக்கல் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியையும், எலும்புக்கு உள்ளே இருக்கும் எலும்பு மஜ்ஜை (Bone Marrow) செயல்பாடும் சிறப்பாக அமைய உதவுகிறது.
- மூளை செயல்பாடு மற்றும் மூளை வளர்ச்சியை சிறப்பாக அமைய செய்கிறது.
- சத்து மாவு கஞ்சில் உள்ள இரும்பு சத்தும் புரதச்சத்தும் எதிர்ப்பற்றலை (Immunity Power) கொடுக்கும்.
Social Plugin