☀ உண்மையான பசி நன்றாக வந்த பின்னரே உண்ண வேண்டும், நேரமும் கடிகாரமும் பார்த்து உணவு உண்பது நன்றல்ல.
☀ பொதுவாக இரண்டு வேலை உணவே போதுமானது.
☀ அவசரத்தில் உண்ண வேண்டாம், கோபம் அதிகம் இருக்கும் போதும் உண்ண வேண்டாம், அப்படி உண்டால் அஜீரணம் உண்டாகும்.
☀ கவலையிலும், துக்கத்திலும் அதிகம் உண்ண வேண்டாம், உண்டால் துக்கம் அதிகரிக்கும்.
☀ தூக்கம் இருக்கும் பொழுது உண்ண வேண்டாம். உண்டால் உணவு செரிமானம் ஆகாது.
☀ பசி இல்லை என்றால் உண்ண வேண்டாம். பசி இல்லாத பொழுது உண்டால் உணவு ருசிக்காது பின்னர் பசியும் இருக்காது.
☀ அதிக களைப்புடன் இருக்கும் பொழுது உண்ணக்கூடாது. களைப்பு இருக்கும் பொழுது தேவை சிறிது ஓய்வும் உறக்கமும் தான்.
☀ உணவுக்குப்பின் சிறிதும் ஒய்வு இல்லை எனில் உண்ண வேண்டாம், அல்லது மிக குறைவாக உண்ண வேண்டும்.
☀ உண்டபின் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை எனில் உண்ண வேண்டாம். உண்டால் அஜீரணம் ஆகும்.
☀ பசி எடுக்குமே என்று உண்டால் பசிக்காமல் தாமதமாகக்கூடும்.
☀ உடலில் ஏதேனும் முக்கிய மாற்றம் அல்லது சீர்கேடு இருக்கும்போது உண்டால் நோய் அதிகரிக்கும்.
☀ உணவு இருக்கிறதே என்பதற்காகவும், உணவு வீணாகிவிடும் என்பதற்காக உண்டால் உடல் நலம் வேனாகும்.
☀ கட்டாய படுத்துகிறார்கள் என்பதற்காக மற்றவர்களுக்காக உண்ண வேண்டாம், அவர்கள் வந்து ஜீரணித்து தர இயலாது.
☀ கெட்டு போன பழைய உணவுகளை உண்டால் உடல் நலம் கெடும்.
- "இயற்க்கை மருத்துவ குறிப்புகள்" என்ற நூலிலிருந்து
உணவு உடல் நலம், maruthuva kurippugal in tamil, eppoludhu unavu undal udal nalam kedum, udal nalam kurippugal, udal nalam tips, udal nalam kappom, unavu unnum murai.unavu undal udal nalam kedum, maruthuva kurippugal in tamil, when we do not take food health tips tamil language
Social Plugin