Type Here to Get Search Results !

பிறப்பு, இறப்பு பதிவை ஒரு வருடத்திற்குள் செய்யாவிட்டால் ஏற்ப்படும் சிரமங்கள்..

Pirappu, irappu irandaiyum oru varudathirkkul padhivu seivadhu avasiyam- Pirappu irappu Padhivu  - பிறப்பு, இறப்பு பதிவு செய்யும் விஷயத்தில் அலட்சியம் காட்டக் கூடாது. (birth certificate, death certificate registration)

ஓராண்டு கடந்து விட்டால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, நீதி மன்ற உத்தரவு பெற்ற பின் தான் பதிவு செய்ய முடியும்.

தாயின் கருவறையில் வளர்ந்த சரியான காலத்தில் பிரசவமாகி சில நிமிடம் அல்லது சில நாட்கள் உயிருடன் இறந்து விட்டாலும் அல்லது தாயின் வயிற்றில் 28 வாரங்கள் இருந்து பிரசவ சமயத்தில் இறந்து பிறந்தாலும் அதை மறைக்காமல் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பதிவு அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதை ஒவ்வொரு வரும் பின்பற்ற வேண்டும்.
birth certificate, death certificate registration, Pirappu, irappu irandaiyum oru varudathirkkul padhivu seivadhu avasiyam- Pirappu irappu sandridhazh, tips in tamil, sattam

பிறப்பு, இறப்பு நடந்த 21 நாட்களுக்குள் இது தொடர்பான தகவலை எழுத்து மூலமாக கொடுக்க வேண்டும். 21 நாட்களுக்கு மேல் 30 நாட்களுக்குள் கொடுப்பதாக இருந்தால், அதற்காக நிர்ணயம் செய்துள்ள கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

ஓராண்டு முடியும் நிலையில்:

பிறப்பு-இறப்பு நடந்து ஓராண்டு முடியும் நிலையில் பதிவு செய்ய வேண்டுமானால் தாசில்தார், பேரூராட்சி, நகர சபை, மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் அனுமதி பெற வேண்டும்.

ஓராண்டு கடந்து விட்டால்:

ஓராண்டு கடந்து விட்டால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, நீதி மன்ற உத்தரவு பெற்ற பின் தான் பதிவு செய்ய முடியும். ஆகவே பிறப்பு, இறப்பு பதிவு செய்யும் விஷயத்தில் அலட்சியம் காட்டக் கூடாது.

birth certificate, death certificate registration, Pirappu, irappu irandaiyum oru varudathirkkul padhivu seivadhu avasiyam- Pirappu irappu sandridhazh, tips in tamil, sattam