கெட்டதிலும் நல்லதைப் பார்க்கலாம்..! - 7 நாட்கள் மழை வெள்ள பேரிடர் கஷ்டத்தின் பிறகு நடக்கக் கூடிய சில நல்ல விஷயங்கள்..!
🎩 1. கிரவுண்ட் ஃப்ளோர் ஃப்ளாட்டுகள் சீப்பான விலைக்கு வரும்..! கையில் பணமும், மனதில் துணிவும் இருப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம்..!
🎩 2. Web page திறப்பதற்கு மூன்று செகண்ட் ஆனால் கூட, ‘ஷிட்...! நான்சென்ஸ்..!’ என்று கத்துபவர்களுக்கெல்லாம் கூட தாம் பொறுமையோடு நாட் கணக்கில் இருக்க முடியும் என்பது் தெரிந்திருக்கும்..! பொறுமை கரண்ட்டினும் பெரிது..!
🎩 3. நம் பக்கத்து வீடுகளில்/ஃப்ளாட்களில் மக்கள் இருக்கிறார்கள் என்பதும், அவர்கள் குரல் எப்படி இருக்கும் என்பதையும் இப்போதுதான் பலர் தெரிந்து கொண்டிருப்பார்கள்..!
🎩 4. பல காலங்களுக்கு பிறகு, கணவன், மனவி, மகன், மகள், வேறு வழியில்லாமல், ஒரே இடத்தில் உட்கார்ந்து, பார்த்து பேசிக்கொண்டதில், சில பிணக்குகள்/பிரச்சனைகள் தீர்ந்திருக்கும்..!
🎩 5. ரொம்ப நாட்களுக்கு பிறகு, மருமகள்கள், மாமியாருக்கு போன் பண்ணி ‘எப்படி இருக்கீங்க அத்தே..?” என்று கேட்டிருப்பார்கள் (எப்படி இருந்தாலும் புருஷன் வீட்டை விட்டு வெளியே போகமுடியாது என்பதால்..!). இருந்தாலும் அந்த ‘நல்லெண்ண’ gestureரினால், உறவுகள் கொஞ்சம் மேம்படும்..!
🎩 6. மொபைல் மட்டும் இல்லாவிட்டால், பாடங்கள் படிக்க ஒரு நாளைக்கு 48 மணி நேரம் கிடைக்கும் என்பதை இளைஞர்/இளைஞிகள் புரிந்து கொண்டிருக்கலாம்..!
🎩 7. பலருக்கு, வெளி நாட்டினரைப் போல, ‘Black Coffee’ குடிக்கும் பழக்கம் வந்திருந்து அதை தொடர்வது ஹெல்த்திற்கு நல்லது..!
🎩 8. தண்ணீர் குடிக்க மட்டும் அல்ல, என பல விஷயங்களுக்கு அத்தியாவசிய தேவை என்பது புரிந்து பலர் இனி தண்னீரை மரியாதையுடன் கையாளுவர்..!
🎩 9. ஐ.டி, மார்க்கெடிங், டீச்சிங், அட்மின், போன்ற வேலைகளையெல்லாம் விட முக்கியமான வேலை எது என்பதை- சாக்கடை க்ளீன் பண்ணுபவர்கள், EB ஆட்கள் பின்னாடி அலைந்ததில் பலர் தெரிந்து கொண்டிருப்பார்கள்..!
🎩 10. ஓலாவெல்லாம் வெறும் பீலா..! நம்ம பல்லவன்தான் என்றென்றும் வல்லவன் என்பது உறைத்திருக்கும்..!
🎩 11. இப்போதைக்கு ரியல் எஸ்டேட் விலை ஏறாது..! ஸ்டாக் மார்க்கெட்டும், கோல்டும் ஏற்கனவே சரியில்லை..!. அதனால் கையிலிருக்கும் பணத்தை ஜாலியாக செலவழித்து சந்தோஷமாய் இருக்கலாம்..!
🎩 12. ‘Old is gold’ என்பது எவ்வளவு உண்மை என்பதை பலர் புரிந்து கொண்டிருப்பர் – லாந்தர்/எண்ணெய் விளக்கு, மூன்று நாள் பாட்டரி வரும் பழைய நோக்கியா, கைவிசிறி, பாய், உப்புமா, போடாத பழைய ஜட்டிகள்..!
வேறு என்னென்ன..? நீங்கள் சொல்லுங்கள்..!
chennai floods aftermath, 7 naal mazhai vella peridar kastathin piragu nadakka koodiya sila nalla vishayangal, changes after chennai floods, maatram, flats rate lower, porumai adhigamaagum, real estate fails, no milk,
Social Plugin