Type Here to Get Search Results !

பனங்கிழங்குகளை அறுவடை செய்ய பனம்பழங்கள் சேகரிக்கும் இராமநாதபுரம் மக்கள்


பனங்கிழங்குகளை அறுவடை செய்ய பனம்பழங்கள் சேகரிக்கும் மக்கள்(Panam Pazham - panam kilangu aruvadai / Traditional Food)

Panam Pazham - panam kilangu aruvadai / Traditional Food, thayarippu murai, vivasayam,
பணம் கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய உணவு. இதில் நார்ச்சத்தும், பல நோய்களை குணப்படுத்தும் மூலிகை குணங்களும் அதிகமுண்டு.

கீழக்கரை, திருப்புல்லாணி ஒன்றியம் தினைக்குளம், பஞ்சந்தாங்கி, ரெகுநாத புரம் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான பனைமரங்கள் உள்ளன. இதில் விளையும் பனம் பழங்களை விவசாயிகள் சேகரிக்கின்றனர்.

பனம்கிழங்கு எவ்வாறு தயாரிக்கபடுகிறது?

பனம் கிழங்குக்காக பனம்பழங்களை சேகரிக்கிறார்கள் விவசாயிகள். மரம் ஒன்றிற்கு ரூ.40 கூலி கொடுத்து பனம்பழங்களை பக்குவமாக கீழே இறக்கி குவித்து வைத்து. பனம் பழம் அழுகி நீர்த்துபோன பின் அதன் கொட்டைகளை, தென்னை தோப்பு மற்றும் கொல்லைப்புறங்களில் 2 அடி ஆழத்தில் வட்டவடிவமாக குழிதோண்டி புதைத்து வைப்பார்கள்.  அவை முளைவிட்டு வளர்ந்து 4 மாதங்கள் கழிந்ததும் பனங்கிழங்குகள் அறுவடைக்கு தயாராகிவிடும். அவற்றை தரம் பிரித்து வியாபாரிகளிடம் விற்பனை செய்துவிடுவார்கள்.
Palmyra tuber, Panam Pazham - panam kilangu aruvadai seiyum murai, Palm Sprouts, panam kizhangu, பனம் கிழங்கு,  traditional snacks for children, Borassus flabellifer, Traditional Food, thayarippu murai, vivasayam