Kadalai maavu kalappadam | Bengal Gram Adulteration & identification process
கடலை மாவு, சாம்பார் போடி, பஜ்ஜி மாவு, இட்லி போடி போன்ற மாவுகளை வாங்கும் பழக்கம் உள்ளவர்கள் அவற்றை கலப்படம் இல்லாமல் வாங்குவது சற்று கடினம்தான்.கடலை மாவில் கலப்படம் செய்ய பயன்படும் பொருள்:
பொதுவாக கடலை மாவு போன்றவற்றில் பீன்ஸ் போன்ற பிற தானியங்களின் மாவுகளை சேர்த்துவிட்டு கடலை மாவின் தோற்றம் வருவதற்காக மேட்டனில் மஞ்சள் (Metanil yellow) என்ற ரசாயனத்தை சேர்ப்பதாக சொல்லப்படுகிறது.கலப்படத்தை கண்டறியும் முறை:
நீங்கள் வாங்கிய கடலை மாவில் மஞ்சள் நிறமிகள் சேர்க்கப்படுள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம்.ஒரு சோதனை குழாயில் அரை டீ ஸ்பூன் கடலை மாவை போட்டு அதனுடன் 3 ml ஆல்கஹால் சேர்த்து இரண்டும் ஒன்று சேரும்படி நன்கு கலக்கவேண்டும். பிறகு அந்தனுடன் 10 சொட்டு hcl அமிலத்தை சேர்க்கவும். சேர்த்த பிறகு அதில் பிங்க் நிறம் தோன்றினால் செயற்கை நிற போடி சேர்க்கப்பட்டுள்ளது என்று பொருள்.
Social Plugin