Type Here to Get Search Results !

ஏழு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும்

ஏழு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும்

நாள்தோறும் ஏழு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம் என அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாஸ்டன் நகரில் உள்ள பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
7 mani nerathirkkum kuraivaaga thoonginaal siruneera padhippu varum, siruneeram seyal ilappu kaaranam, thookkam, sleep problem, kidney function, 7 hours sleep vs kidney, health research news in tamil language,

நாம் தூங்கும் நேரத்துக்கும் சிறுநீரக செயல்பாட்டுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது. மனிதர்களின் உள் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு வழக்கமான காலமுறையை (circadian clock) பின்பற்றுகின்றன. அதாவது சில உறுப்புகள் நாம் தூங்கும்போதும் மட்டும் இயங்கும்.

இதில், நாள்தோறும் குறைவாக தூங்குபவர்களின் சிறுநீரக செயல்பாடு படிப்படியாக குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 4,238 நோயாளிகளிடம் சிறுநீரகப் பாதிப்பு குறித்து மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக மருத்துவமனை மருத்துவர் ஜோசப் மெக்மில்லன் கூறினார்.

அதாவது, இரவில் 7 மணிநேரம் தூங்கும் பெண்களைவிட, 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் பெண்களில் 65 சதம் பேரின் சிறுநீரக செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறைவாக தூங்கும் ஆண்களுக்கும் இதே போல சிறுநீரக பாதிப்பு ஏற்ப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.