Type Here to Get Search Results !

பெண்கள் முகத்திலும், மேல் உதட்டிலும் உள்ள முடியை இயற்கையாக நீக்குவது எப்படி?

Pengal mugatthil udhatin mel ulla mudiyai neekuvadhu eppadi? {Remove unwanted facial hair tips in Tamil | Natural remedies for Face upper lips hair removal }

ஒரு சில பெண்கள் முகத்திலும், மேல் உதட்டிலும் சற்று  முடி அதிகமாக இருப்பது போல அடர்த்தியாக இருக்கும். அவர்கள் குழந்தையாக இருக்கும் காலத்திலிருந்தே முகத்தில் மஞ்சள் பூசி வந்திருந்தால் இதுபோன்ற முடி முளைத்திருக்காது. சரி, முகத்தில் இருக்கும் முடியை இயற்கை வைத்தியம் வழியாக அகற்றுவது எப்படி என காண்போம்.
Pengal mugatthil udhatin mel ulla mudiyai neekuvadhu eppadi, {Remove unwanted facial hair tips in Tamil, Natural remedies for Face upper lips hair removal, udhadu mel mudi nekka waxing, azhagu kurippugal, iyarkai vaithiyam, Beauty Tips, Pengal.com, Natural treatments in Tamil,

முடி நீக்க மருத்துவம் 1: 


தேவையான பொருட்கள்:

தேன் - 1 டீ  ஸ்பூன்
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - சில துளிகள்

மருத்துவம் செய்முறை:


ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை, சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு கரண்டி கொண்டு நன்றாக அடித்துக் கலக்கிப் பசை போலாக்குங்கள்.

பின் இதனை அப்படியே ஒரு மைக்ரோவேவ் ஓவனில் மூன்று நிமிடங்கள் வைத்து சூடு செய்யுங்கள். பிறகு வெளியே எடுத்து கை சூடு தாங்கும் பதத்தில் வந்ததும், அதனை முகத்தில் முடி வளர்ந்துள்ள பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். குறிப்பாக முடியானது எந்த திசையை நோக்கி வளர்ந்துள்ளனவோ, அந்தத் திசைகளில் தடவ வேண்டியது முக்கியம்.

இப்போது ஒரு சுத்தமான பருத்தியால் ஆன துணி ஒன்றை எடுத்துக் கொண்டு, முகத்தில் இக்கலவை தடவிய பகுதியின் மேல் போர்த்தி அழுத்தி எதிர்த்திசையில் இழுங்கள். இப்போது முகத்தில் உள்ள முடிகள் வேரோடு அகற்றப்பட்டுவிடும். இதனால் முகத்தில் நீண்ட காலத்திற்கு முடிகள் வளராமல், முகம் வழவழப்புடன் திகழும்.


முடி நீக்க மருத்துவம் 2:


தேவையான பொருட்கள்:
முட்டை வெள்ளை கரு - 1
மக்காசோள மாவு(corn flour) - தேவையான அளவு

செய்முறை:
முட்டையின் வெள்ளை கருவை மக்காசோள மாவுடன் கலந்து கெட்டியான பசை பதத்திற்கு வரும் வரை ஒன்றாக கலந்து அதை உதட்டின் மேலுள்ள முடியின் மீது தடவி காய விடுங்கள். காய்ந்தவுடன் விரல்களால் மெதுவாக முடி முளைத்திருக்கும் பக்கத்திற்கு எதிர்பக்காமாக சுரண்டி எடுத்துவிடுங்கள். இந்த வைத்திய முறையை வாரத்திற்கு இரண்டு முறை என்ற விகிதத்தில் சில மாதங்களாக தொடர்ந்து செய்துவந்தால் முழுமையான பலன் தெரியும்.

முடி நீக்க மருத்துவ முறை 3:


மஞ்சள் தூள் - 1 tsp
பால் - தேவையான அளவு


செய்முறை: மஞ்சள் தூளை சிறிது பாலுடன் கலந்து பசை போல வந்ததும் அதை உதட்டின் மேலுள்ள முடிகளின் மீது தடவி சிறிது நேரம் அப்படியே காயவிடுங்கள். பிறகு கையல் மெதுவாக சுரண்டி எடுத்துவிடுங்கள். இதை வாரத்திற்கு இரடுமுறை என்ற விகிதத்தில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் செய்துவந்தால் நல்ல பலன் தெரியும்.

முடி நீக்க மருத்துவ முறை 4:

மஞ்சள் தூள், கடலை மாவு, தண்ணீர்.

செய்முறை: மஞ்சளையும் கடலை மாவையும் சம அளவு எடுத்து அதனுடன் தண்ணீரை விட்டு பசை போல வந்ததும் அதனை முடி உள்ள இடங்களில் தடவி அப்படியே காயவிடுங்கள். பிறகு முடி முளைத்திருக்கும் திசைக்கு எதிர்திசையாக கையல் மெதுவாக சுரண்டி எடுத்துவிடுங்கள். பலன் தெரியும்.

மேற் குறிபிட்டுள்ள இயற்க்கை மருத்துவங்களை எடுத்துகொள்வதுடன்  Waxing செய்துகொள்வதையும் பரிந்துரை செய்கிறார்கள் சில அழகு நிபுணர்கள்.

How to remove hair in girls face | Pengalin Mugathilulla mudiyai neekkum murai- பெண்கள் முகத்திலும், மேல் உதட்டிலும் உள்ள முடியை இயற்கையாக நீக்குவது எப்படி?

முகத்தில் மேல் உதட்டில் இருக்கும் முடியை இயற்கை வைத்தியம் வழியாக அகற்றுவது எப்படி என காண்போம்,Pengal mugatthilulla mudiyai neekuvadhu eppadi, How to remove hair in girls face, remove hair in upper lips, udhattil mudi edukka, tips to remove hair from upper lips naturally, face hair removal in tamil, unwanted facial hair excessive, face hair removal tips in tamil,