Penn, eeru Podugu thollai poga eliya patti vaithiyam - lice removal tips in tamil - பேன், ஈறு தொல்லை சரியாக
பள்ளி செல்லும் உங்கள் பிள்ளைகளின் அருகமையில் அமர்ந்திர்க்கும் நண்பர்கள் தலையிலிருந்து உங்கள் பிள்ளைகளின் தலையிலும் பேன் தொற்றி கொண்டு தலை அரிப்பாய் அரிக்கும்."அம்மா தலை அறிக்கிதம்மா".. என அடிக்கடி சொன்னார்கள் என்றால் நீங்கள் சற்று கவனமாக அவர்களது தலையை பார்க்க வேண்டும். தலையில் பேன் வைத்துள்ளதா அதனால் ஈறுகளும் வந்துள்ளதா என ஆய்வு செய்து உறுதி செய்துகொள்ளுங்கள்.
பேன் வைத்திருந்தால் பேன் சீப்பை போட்டு மெதுவாக தலையை வாரலாம். இருந்தபோதிலும் பேன் முற்றிலும் ஒழியாது, மேலும் முடியுடன் ஒட்டிக்கொண்டுள்ள ஈறுகளை பிரித்தெடுப்பதும் சிரமாக இருக்கும்.
இதனை இயற்க்கை வழியில் சரிசெய்ய சில கை மருந்துகள் இருக்கின்றன. அவற்றை பாட்டி வைத்தியம் என்ற பெயரில் அந்த காலத்திலிருந்து பின்பற்றி வந்துள்ளனர். அவற்றை காண்போம்.
பேன் தொல்லை போக 3 எளிய இயற்க்கை வைத்தியம்:
- தலையில் பேன் இருந்தால் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பொது நல்லெண்ணையுடன் ஒரு மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து தலையில் தேய்த்து குளித்தால் பேன் போய்விடும்.
- தலைக்கு எண்ணை தேய்க்கும் எண்ணையோடு ஊமத்தை இல்லை சாற்றை கலந்து தலையில் தேய்த்துகொண்டால் ஈறு மற்றும் பேன் போய்விடும்.
- வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டிகொண்டால் பேன், பொடுகு, ஈர் போன்றவைகள் அனைத்தும் போய்விடும்.
Social Plugin