Muga paru vara Karanam:
பருவ வயதில் ஆன்ட்ரோஜன் என்னும் ஹோர்மோன் ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும் போது முகப்பரு உண்டாகிறது. (முகப்பரு வர ஆரம்பித்தால் 'எல்லாம் வயசுக் கோளாறு', 'உன்னை யாரோ சைட் அடிக்கிறாங்க' என்று சிலர் நக்கல் செய்வார்கள்..!)நமது சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் உள்ளது, அவை சீபம் என்ற எண்ணைப் பசை போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது. இந்த சீபம் மயிர்க் கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப் பயன்படுகின்றன.
பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதிக அளவில் படிந்து, திரண்டு, ரவை போன்ற முகப்பருக்களை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொண்டு, பருக்கள் பெரிதாக வீங்கிக் கொள்கின்றன.
muga paru vara karanam, muga paru, sebam, adhiga muga paru, pimples, reason for excess pimples in tamil
Social Plugin