தர்மபுரி அருகே பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி தங்கவேல்(50). அவர் தனது வீட்டில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அதை தனது வீட்டில் ஒருவராகவே பாவித்து அதற்கென தனி வண்டி ஒன்றையும் உருவாக்கியுள்ளார். அந்த வண்டியில் பால் கேன்களை வைத்து இழுத்துச் சென்று தினமும் பாலை சொசைட்டிக்கு கொண்டு சேர்ப்பது அவரது செல்ல நாயின் வேலையாம்.
இந்தநிலையில் தனது மகள் குறளரசியின் திருமண ஊர்வலத்தை வித்தியாசமாக நடத்த திட்டமிட்டார் தங்கவேல். அதன்படி, மேள தாளம் முழங்க மணப்பெண்ணை நாய் பூட்டிய வண்டியில் வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தார். இது குறித்து அவர் கூறுகையில் அவரது செல்ல நாய்க்கு பெருமை சேர்க்கவே தனது மகளை நாய் சாரட்டு வண்டியில் வைத்து ஊர்வலம் நடத்தினேன் என்றார்.
Social Plugin