தற்க்காலத்தில் விதவிதமான சொகுசு படுக்கைகள் வந்துவிட்டன, கூடவே பல வகை நோய்களையும் நம்மிடம் கொண்டுவந்து சேர்த்துவிடுகின்றன. ஆனால் நமது மூதாதையர்கள் இயற்கையில் கிடைத்த போருட்களை கொண்டு தயாரித்த பாயில் படுதுறங்கியதால் உடல் வலி, உடல் சூடு மற்றும் பல நோய்களிளிரிந்து தங்களை காத்துக்கொண்டனர். அவர்கள் படுத்துறங்கிய பாய்களின் மூலம் அடைந்த பலன்களை எதிர்காலத்தி வரபோகும் சந்ததியர்களுக்கு உபயோகப்படும் வகையில் குறிப்பிட்டும் வைத்துள்ளனர். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூலில் தெளிவாக விளக்கியுள்ளனர்.
கம்பளிப் படுக்கை:
கம்பளி படுக்கை குளிர்காலத்திற்கு உகந்தது. கம்பளி படுக்கையில் படுத்தால் குளிருக்கு இதம் தரும். குளிர் ஜுரம் நீங்கும்.
கோரைப் பாய்:
ஆற்றோரத்தில் நீரோட்டம் உள்ள இடங்களில் கோரைப் புற்கள் வளர்கின்றன. இந்தக் கோரைகள் முளைத்ததில் இருந்து அறுவடை ஆகும் வரை நீர்ப்பிடிப்பான நிலத்தில் நின்று வளர்வதால், இதிலிருந்து செய்யப்படுகிற பாய்கள் படுப்பதற்கு சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்
கோரைப் பாய் உடல் சூடு, மந்தம், ஜுரம் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியும், நல்ல உறக்கமும் தரும்.
பிரம்பு பாய்:
பிரம்பு பாய் சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
தாழம் பாய்: வாந்தி, தலைசுற்றல், பித்தம் நீங்கும்.
ஈச்சம் பாய்: வாதநோய் குணமாகும், சோகை நீங்கும். உடல்சூடு, கபம் இவை அதிகரிக்கும்.
மூங்கில் பாய்: உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
இலவம்பஞ்சு படுக்கை: உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.
ரத்தினக் கம்பளம்: நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.
மலர்ப் படுக்கை: ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.
பாயின் வேறு சில பயன்கள்:
இது தவிர இப்படியும் பாய் பயன்படுகிறது பனை ஓலை பாய் பல சரக்கு, வெல்ல மண்டிகளில் சரக்குகளை கையாளப் பயன்படும்.
மூங்கில் தார்பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புச் சுவர் மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.
padukkai sugam tharum iyarkai paai vagaigal, iyarkkai porutkal, paayin palangal, udal soodu, udal ushnam theera paai, kulir kaala kambali, korai paai, pirambu, thaalam paai, eecham, moongil, ilavam panju, panai olai, ratthinam padukkai, health benefits by natural sleeping mats, health tips in tamil,
Social Plugin