Type Here to Get Search Results !

கால்களால் விமானத்தை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த உலகின் முதல் பெண்..

அமெரிக்காவில் கால்களினாலே விமானம் ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் பெண் ஒருவர் [kaalkalaal vimanam otti Guinness ulaga saadhanai padaitha mudhal pen] 

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ்(32). இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஆனால், வளர வளர தன் உடல் குறைபாட்டை முழுமையாக புரிந்து கொண்டு, எக்காரணத்தைக் கொண்டும் இந்தக் குறைபாடு தனது வாழ்க்கையை பாதிக்கக் கூடாது என்று உறுதியோடு இருந்தார் ஜெசிகா.
girl without arms flying a flight with her legs, guinness world record, tamil news, motivational news in tamil


கால்களை கைகளாக மாற்றிக் கொண்டு பியானோ முதல் செல்போன் வரை அனைத்தையும் இயக்கப் பழகினார்.  இதே போல கால்களால் கார் ஓட்டவும் அவர் கற்றுகொண்டார்.

ஒரு நாள் ஜெசிகாவுக்கு விமானத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இதற்காக அவர் விமான பயிற்சி நிறுவனத்தை அணுகினார். கை இல்லாத பெண்ணால் எவ்வாறு விமானம் ஓட்ட முடியும் என்று வியந்த பயிற்சி நிறுவனம், அவர் தானே காரை ஓட்டிக் கொண்டு வந்தார் என்பதை அறிந்ததும் உடனடியாக அவருக்கு பயிற்சியளிக்க முன் வந்தது. 1945-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட குட்டி விமானத்தை ஜெசிகாவின் பயிற்சிக்கு பயன்படுத்த முடிவுசெய்தனர்.

அதன்படி அந்த பழைய குட்டி விமானம் புதுப்பிக்கப்பட்டு ஜெசிகாவிற்கு 3 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்து அவருக்கு பைலட் உரிமம் வழங்கப்பட்டது. கால்களால் விமானத்தை ஓட்டிய உலகின் முதல் பெண் என்ற கின்னஸ் சாதனையையும் அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

---------------- Tanglish -----------

Amerikkavil kalgalinale vimanam otti Guinness satanai pataittullar pen oruvar [kaalkalaal vimanam otti Guinness ulaga saadhanai padaitha mudhal pen]

amerikkavin Arizona makanattai sernta Jessica cox(32). Irantu kaikalum illamal piranthavar. aanal, valara valara tan utal kuraipattai mulumaiyaka purintu kontu, ekkaranattaik kondum indak kuraibadu thanadu valkkaiyai patikkak kootatu enru uruthiyotu iruntar Jessica.

Kalkalai kaikalaka matrik kontu piyano mutal cellphone varai anaittaiyum iyakkap palakinar. Ite pola kalkalal kar ottavum avar karrukontar.

Oru nal Jessicavukku vimanattai iyakka ventum enra asai eluntatu. Itarkaka avar vimana payirci niruvanattai anukinar. Kai illata pennal evvaru vimanam otta mutiyum enru viyanta payirci niruvanam, avar tane karai ottik kontu vantar enpatai arintatum utanatiyaka avarukku payirciyalikka mun vantatu. 1945-M antu tayarikkappatta kutti vimanattai Jessicavin payircikku payanpatutta mutivuseytanar.

Atanpadi anta palaiya kutti vimanam putuppikkappattu Jessicavirku 3 antukalaka payirci alikkappattatu. Payirci mutintu avarukku pailat urimam valaṅkappattatu. Kalkalal vimanattai ottiya ulakin mutal pen enra kinnas satanaiyaiyum avar pataittullar enpatu kurippitattakkatu.
Girl born without arms became pilot and flying with her feet, Guinness ulaga saadhanai, motivational stories in tamil language, tamil students education news