எந்த பக்கமா படுத்து தூங்கினால் உடம்புக்கு நல்லது..? கர்ப்பிணி பெண்கள் தூங்கும் பொழுது எப்படி படுக்க வேண்டும்? குறட்டை விடுபவர்கள் எந்த முறையில் படுத்து தூங்கினால் நல்லது?
நாம் தூங்கும் நிலைகளை பொருத்து நமது உடல் நலம் மேம்படும். இருதய நலனை பாதுகாப்பதும் முதுகுவலி வராமல் தடுப்பதும் நாம் தினமும் தூங்கும்போது படுக்கும் நிலைகளை பொருத்துள்ளது.
இடது புறமாக படுப்பது ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும், கர்ப்பமாக உள்ள பெண்கள் முதுகு புறமாக படுத்தால் குழந்தையை பாதிக்கும் இப்படியாக படுக்கும் முறைகள் சில உள்ளன அவைகளை விரிவாக காண்போம்.
முதுகுபுறமாக படுத்தால்:
- கழுத்து வலி வரமால் பாதுகாக்கும்: தலை, கழுத்து மற்றும் தண்டுவட பகுதி நடுநிலையாக இருப்பதால் இந்த நிலை கழுத்து வலி வரமால் பாதுகாக்கும்.
- முக தோல் சுருக்கம் நீங்கும்: முகத்திலுள்ள சருமம் மேல் நோக்கி செல்லாமல் இருப்பதால் முகத்தில் சுருக்கம் விழுவது குறைகிறது.
- நெஞ்சு கரிக்காமல் இருக்க செய்கிறது: இந்த நிலையில் படுக்கும் பொது தலை மேல் நோக்கி இருக்கும் காரணத்தால் வயிற்றில் உள்ள செரிமான அமிலம் மேல் நோக்கி வருவது குறைந்து நெஞ்சு எரிச்சல் வரமால் தடுக்கிறது.
குறிப்பு:
ஆனால் குறட்டை விடுபவர்கள் இந்த படுக்கை நிலையில் இருப்பது உகந்ததல்ல
குப்புற படுத்து தூங்கும் நிலை:
- குறட்டை விடுபவர்கள் குப்புற படுக்கலாம், அப்படி படுப்பதால் குரட்டை விடுபவர்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.
குறட்டை விடுபவர்களுக்கு உகந்த சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் ~ Kurattai Treatment in Tamil ~ Patti Vaithiyam
- மூட்டு வலி அதிகமாகும்: மூட்டு வலி உள்ளவர்கள் இந்த நிலையில் தூங்கினால் தசை மற்றும் நரம்புகளில் அழுத்தம் ஏற்படுவதால் மூட்டு வலி அதிகமாகும்.
பக்கவாட்டில் சாய்ந்து படுக்கும் நிலை:
- கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த நிலை. இப்படி படுத்துறங்குவதால் கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு ரத்த ஓட்டம் சீராக சென்றடைந்து குழந்தை வளருவதற்கு எதுவாக இருக்கும்.
கர்ப்பம் தரித்திருக்கிறேனா? இல்லையா? என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்
- ஆனால் பொதுவாக பெண்களுக்கு இந்த நிலையில் உறங்கும் பொழுது மார்பகங்களின் சம நிலை, அளவும் சற்று மாற வாய்ப்புள்ளது.
- குறட்டை விடுபவர்கள் பக்கவாட்டில் சாய்ந்து படுக்கலாம், அப்படி படுப்பதால் குறட்டை விடுபவர்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.
- நெஞ்சு கரிக்காமல் நெஞ்சு எரிச்சல் வரமால் இருக்க செய்கிறது: இந்த நிலையில் படுக்கும் பொது தலை மேல் நோக்கி இருக்கும் காரணத்தால் வயிற்றில் உள்ள செரிமான அமிலம் மேல் நோக்கி வருவது குறைந்து நெஞ்சு எரிச்சல் வரமால் தடுக்கிறது.
நெஞ்சு எரிச்சலை தவிர்க்கும் - இயற்கை மருத்துவ வழிமுறைகள்
Social Plugin