Type Here to Get Search Results !

கொள்ளு ரசம் [சமையல்]

 கொள்ளு ரசம்  [சமையல்] - Kollu rasam recipe in Tamil


உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம்
kollu rasam seimurai vilakkam, samayal in tamil, kollu recipes, horse gram rasam

கொள்ளு ரசம் செய்ய தேவையான பொருள்கள்:

  1. கொள்ளு - 1 கப்
  2. வரமிளகாய் - 3
  3. மல்லி - 1 டீஸ்பூன்
  4. சீரகம் - 1/2 டீஸ்பூன்
  5. மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
  6. கறிவேப்பிலை
  7. பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
  8. பூண்டு - 3 பல் நறுக்கியது
  9. எண்ணெய்
  10. கடுகு
  11. கொத்தமல்லி இலை

கொள்ளு ரசம் செய்முறை:

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வேக வைத்து எடுக்கவும். வேக வைத்த கொள்ளு, வரமிளகாய், மல்லி, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு இறுதியில் கொத்தமல்லி இலையை கில்லி போட்டு இறக்கவும்.

kollu rasam seimurai vilakkam, samayal in tamil, kollu recipes, horse gram rasam, udal edai kuraikka unavu, thoppai kuraiya unavu, kudhirai kollu,