Vaai thunaatram sariyaaga vazhigal:
பெரும்பாலோனோர் நாள் தோறும் சந்திக்கும் வழக்கமான பிரச்சனை தான் வாய் துர்நாற்றம். வாய் துர்நாற்றம் இருந்தால், யாரிடமும் எதையும் கலந்தாலோசிக்க முடியாமல், எங்கு நம் வாய் துர்நாற்றம் உடனிருப்பவர்களின் முகத்தை சுளிக்க செய்யுமோ என்ற எண்ணத்துடனேயே, சரியாக யாருடனும் பேச முடியாமல் தவிப்பார்கள் .ஈறுகளில் ஏற்ப்படும் ரத்தகசிவை சரிசெய்ய இயற்க்கை வழிகள்.. Pal eerugalil ratha kasivu
வாய் துர்நாற்றத்தைத் தடுக்க ஒருசில வழிகள் உள்ளன. அவற்றை தவறாமல் செய்து வந்தால், வாய் துர்நாற்றத்தைத் முற்றிலும் தவிர்க்கலாம்.
வாய் துர்நாற்றத்தை விரட்டகூடிய அந்த வழிகளை காண்போம்:
- உணவைத் தவிர்க்க வேண்டாம்: உணவைத் தவிர்த்து வந்தால் வாய் துர்நாற்றம் வீசும். ஆகவே எப்போதும் உணவைத் தவிர்க்கக்கூடாது. முக்கியமாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
- அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்: வாய் உலர்ந்து போனால் தான் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே எப்போதும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தால், வாய் துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்கலாம்.
- கீரைகளை அதிகம் சாப்பிடவும்: உணவில் குளோரோபில் நிறைந்த உணவுப் பொருட்களான கீரையை அதிகம் சாப்பிட வேண்டும். முக்கியமாக கொத்தமல்லியை உணவில் சேர்த்து வந்தால், அது வாயை புத்துணர்ச்சியுடன் வைத்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.
- மசாலாப் பொருட்கள்: ஏலக்காய், சோம்பு, கிராம்பு போன்றவற்றை வாயில் போட்டு மென்று வந்தால், வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும், துர்நாற்றம் குறையும். குறிப்பாக கிராம்பில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், வாய் துர்நாற்றத்தை போக்குவதோடு மட்டுமில்லாமல், ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
- நாக்கை சுத்தம் செய்யவும்: பற்களை துலக்கும் போது, நாக்கை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் நாக்கின் மேல் உள்ள வெள்ளை படலம் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க அன்றாடம் நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். பல் துலக்கும் பிரஸ் வைத்தே நாக்கை தேய்க்கலாம்.
- காபி, டீக்கு பின் தண்ணீர்: காபி அல்லது டீ குடித்த பின்னர் தவறாமல் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் பின்பற்றவேண்டும். இதனால் வாயில் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, துர் நாற்றம் தடுக்கப்படும்.
- சூயிங் கம்: எந்நேரமும் கையில் பிரஷ் அல்லது மௌத் வாய் வைத்துக்கொண்டு சுற்ற முடியாது. எனவே தவறாமல் சுகர்-ப்ரீ கொண்ட சூயிங்கம்மை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். குறிப்பாக புதினா சுவை கொண்ட சூயிங்கம்மை பயன்படுத்துவது நல்லது.
Social Plugin