Chennai (10 May 2015): பைக்கில் சென்றவனை பிடித்து 100 ருபாய் லஞ்சம் வாங்க இழுத்ததால் வாலிபர் கிழே விழுந்து மரணம். போலிசுக்கு தர்ம அடி..
சென்னை கே.கே.நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களைப் பிடித்து இழுத்ததால் கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸாரை பொதுமக்கள் போட்டு பிளந்தனர், கட்சியை கிழே உள்ள கானொளியில் காணலாம்.
மூவரும் கே.கே.நகர் விஜயராகவபுரம் 80 அடி சாலையில் செல்லும்போது, அங்கு நின்று கொண்டிருந்த கே.கே.நகர் போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் சற்குணம் தலைமையிலான போலீஸார், மோட்டார் சைக்கிளை மறித்தனர். ஆனால், 3 பேரும், போலீஸாரிடமிருந்து தப்பிக்க, சற்று விலகி வேகமாகச் செல்ல முயன்றனர். அப்போது, அங்கு நின்றிருந்த போலீஸார், மோட்டார் சைக்கிளில் கடைசியாக இருந்த விக்னேஷின் சட்டையைப் பிடித்து இழுத்தாராம். இதில் நிலை தடுமாறி அந்த மோட்டார் சைக்கிள், அங்கிருந்த சாலைத் தடுப்பின் மீது மோதியது.
இந்த விபத்தில் சாலைத் தடுப்பில் இருந்த கம்பி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த செல்வத்தின் வயிற்றுப் பகுதியில் குத்தி, பலத்த காயம் ஏற்பட்டது. அதிக ரத்தப் போக்கு காரணமாக செல்வம் சிறிது நேரத்தில் இறந்தார்.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், போலீஸாரைத் தாக்கினர். மேலும் காவல்துறை வாகனத்தையும் தாக்கி உடைத்தனர்.
Social Plugin