Type Here to Get Search Results !

கல்லீரல் ஆரோக்கியம் காக்க டயட்... Diet that take care of your Liver

Diet to that take care Liver

கல்லீரல் ஆரோக்கியம் காக்க டயட்... Kalleeral aarokkiyam kaakka diet

கல்லீரல் தான் உடலில் உள்ள நச்சுக்களை பிரித்து உடலில் இருந்து வெளியேற்றும். கல்லீரலானது சரியாக செயல் படாமல், டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேறாமல் இருந்தால், பின் அதனால் மிகவும் மோசமான பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். எனவே கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், கல்லீரலில் நோய்கள் வராமல் இருக்கவும், சரியான டயட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒரு சில பழக்க வழக்கங்களை கைவிட வேண்டும். இங்கு கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க மேற்கொள்ள மற்றும் தவிர்க்க வேண்டிய டயட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாப்பிடவேண்டிய இயற்க்கை உணவுகள்:

வெங்காயம் மற்றும் பூண்டு: இந்த உணவுப் பொருட்களில் சல்பர் அதிகம் உள்ளது. இவை கல்லீரல் நன்கு செயல் பட உதவி புரிவதோடு, கல்லீரலில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்கும்.

பீட்ரூட்:  பீட்ரூட்டில் உள்ள பெக்டின் என்னும் பொருள் கல்லீரலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்ற உதவும். மேலும் பீட்ரூட் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.


முட்டைக்கோஸ்: முட்டைக்கோஸிலும் சோடியம் அதிகம் உள்ளது. இதுவும் கல்லீரலில் இருந்து தேவையற்ற டாக்ஸின்களை வெளியேற்றவும், கல்லீரல் ஆரோக்கியமாக செயல்படவும் உதவும்.

கேரட்: கேரட்டில் உள்ள நியாசின் மற்றும் பீட்டா கரோட்டீன் கண்கள் மற்றும் கல்லீரலுக்கு நல்லது. முக்கியமாக இதில் உள்ள நியாசின், டாக்ஸின்கள் வெளியெற உதவுவதோடு மட்டுமல்லாமல், கல்லீரல் கெட்ட நச்சுக்களை உறிஞ்சாமல் தடுக்கும்.

கல்லீரல் பாதிப்பை தடுக்க தவிர்க்க வேண்டிய டயட்:

 பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் கெடாமல் பதபடுத்த சேர்க்கப்பட்டுள்ள  கெமிக்கல்களால் கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படும்.

செயற்கை சுவையூட்டிகள்: செயற்கை சுவையூட்டிகள் மற்றும் ஃபுருக்டோஸ் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக கொக்க கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.

ஆல்கஹால்: ஆல்கஹாலை அளவுக்கு அதிகமாக குடித்தால், கல்லீரலின் செயல்பாடு மற்றும் கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே ஆல்கஹால் பருகுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Kalleeral paadhugakka unavugal diet, Beetroot, carrot, cabbage, ginger, garlic are good for Liver. 
Alcohol, Beverages, Preserved foods, artificial sweeteners are to be avoided to take care of your liver.