Type Here to Get Search Results !

பெண்கள் முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக உள்ளது. மாதவிடாய் சரியாக வருவதில்லை. காரணம் என்ன?

நான் 26 வயது பெண். எனக்கு முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக உள்ளது. மாதவிடாய் சரியாக வருவதில்லை. காரணம் என்ன?
-திவ்யா, நாமக்கல்

நீங்கள், கூறும் அறி குறிகளை வைத்து பார்க்கும் போது, சினைப் பை நீர்கட்டிகள் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆண் பாலின ஹார்மோன், அளவுக்கதிகமாக உடலில் சுரக்கும் போது தான், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக, சீரற்ற மாத விலக்கு அல்லது மாதவிலக்கு வராமலிருத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். சினைப் பைகள், ஆண்பால் ஹார்மோன்களை சுரக்க துவங்குவதால், சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளியாகும், ஓவல்யூஷன் எனப்படும் செயல் பாட்டை பாதிக்கிறது. இதனால், உடலில் ஆண் தன்மை அதிகரிக்கும். சினைப்பை நீர் கட்டிகளால் பாதிக்கப்பட்டோருக்கு, உடல் எடை அதிகரிக்கலாம். இடுப்பை சுற்றி கொழுப்பு சேரலாம். மார்பு, வயிறு, முதுகு, விரல்கள் போன்ற இடங்களில், அதிக ரோமங்கள் முளைக்கலாம். மார்பகம் சிறிதாவது, குரல் கடினமாவது போன்ற பாதிப்புகள் வரலாம். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
-சாந்தி, மகளிர் நல மருத்துவர், சென்னை

 - தினமலர் நாளிதழிலிருந்து

pengal mugatthil muidi valarchi adhigamaaga ulladhu maadhavidaai sariyaaga varuvadhilla enna kaaranam? sinaippaiyil neer kaatti kaaranamaaga irukkalaam