Pengalai adhigamaaga thaakkum Polycystic Ovary Syndrome (PCOS) kulandhaiyinmai pirachanai noi:
உலகில் நான்கு பெண்களில் ஒருவருக்கு, பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்.,) இருப்பதால், குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.நோயின் அறிகுறிகள்: இந்த நோய், பெண்களின் கருப் பையை தாக்குவதால், வெளியில் தெரிவதில்லை. இதனால், ஒழுங்கற்ற மாத விடாய், முடி கொட்டுதல், மன அழுத்தம் ஏற்படுதல், எண்ணங்களில் மாற்றம், தேவையற்ற இடங்களில் முடி வளர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. திருமணமான பெண்கள் என்றால், குழந்தையின்மை அல்லது பிரசவத்தில் சிக்கல் தோன்றும்.
விளைவுகள்: கர்ப்பத்தின் துவக்கத்திலேயே, குறைந்த பட்சம் மூன்று முறையாவது, கருதங்காமல் கலைந்து விடும்.
Related: கர்ப்பம் தரித்திருக்கிறேனா? இல்லையா? என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்
கர்ப்பகால சர்க்கரை நோய்: கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஒரு வகை சர்க்கரை நோய். இதற்குரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதால், தாய்க்கும், குழந்தைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குழந்தை பிறந்தபின், இந்த நோய் மறைந்து விடும். ஒரு சிலருக்கு தொடர வாய்ப்புள்ளது.
ரத்த அழுத்தம் அதிகரிப்பு: தாயின், 20 வது வார கர்ப்பகாலத்தில் திடீரென ரத்தஅழுத்தம் உயர்வதால், தாயின் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் மூளை பாதிக்கும் அபாயம் உள்ளது.
சிசேரியன் பிரசவம்: பி.சி.ஓ.எஸ்., உள்ள கர்ப்பிணிக்கு இயற்கையான பிரசவம் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும் போது, தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணத்திற்கு முன், ஒழுங்கற்ற மாத விடாய், முடி கொட்டுதல் போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனே ஒரு நல்ல டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
பரிசோதனை செய்து PCOS இருப்பது உறுதியானால், உடனே
சிகிச்சையை துவங்க வேண்டும். ஒரு சிலருக்கு முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு மூலம் சரியாகிவிடும்.
ஒரு சிலருக்கு மாத்திரைகள் மூலமும், குழந்தைப் பேறுக்காக காத்திருப்பவர்கள் என்றால், ஓவரிகளில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். ஒமேகா-3(Omega-3) கொழுப்புள்ள உணவுகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேதம், யோகா அக்குபஞ்சர் மற்றும் பிராணாயாமமும் நோயை குணமாக்கும்.
உடற்பயிற்சி மற்றும் உணவு: முறையான உணவுப் பழக்கம், தவறாத உடற் பயிற்சி மற்றும் நடை பயிற்சியால் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். இன்சுலின் மற்றும் ஆன்ட்ரஜன் அளவைக் குறைக்கும் பாலீஷ் செய்யப்பட்ட கார்போஹைடிரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறையும். இறைச்சி, கொட்டைகள், தானியங்கள், உலர் விதைகள், முட்டை, சீஸ், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு, பச்சை கீரைகள், முட்டைக்கோஸ், தக்காளி போன்ற அடர்ந்த நிறமுள்ள காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
- தினமலர் நாளிதழ் செய்தி
Pengalai adhigamaaga thaakkum Polycystic Ovary Syndrome (PCOS) kulandhaiyinmai pirachanai noi, detail about pcos in tamil, pengal kulandhai pirappu thollaigal, pcod,
Social Plugin