Type Here to Get Search Results !

தினசரி செய்யும் உடற்பயிற்சியால் உண்டாகும் 24 நன்மைகள்.

தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் பெறும் நன்மைகள் [thinasari udarpayirchi seivadhaal undaagum nanmaigal - Health Benefits of regular exercise ]!!!

Health Benefits of regular exercise,thinasari udarpayirchi seivadhaal undaagum nanmaigal, udalpayirchiyin nanmaigal, 24 benefits of everyday fitness

கவர்ச்சிகரமான உடல் அமைப்பு [ Kavarchiyaana udal amaippu]:

 உடற்பயிற்சி செய்வதன் மூலமாக கட்டுக்கோப்பான உடல் அமைப்பு பெறலாம். அதனால் தினசரி சிறிது நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் ஆகும்.


உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது [urpatthi thiran adhigarikkum]:

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் சோர்வு குறைவதினால் நாம் தினசரி செய்யும் வேளைகளில் அதிகளவில் ஈடுபட முடியும். அதனால் நமது உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது.


வாழ்நாள் அதிகரிக்க [Vaazh naal adhigarikkum]: 


உடற்பயிற்சி செய்வதன் முக்கிய காரணம் என்னவெனில் நமது வாழ்நாள் அதிகரிக்க இது உதவுகிறது. உடலும் மனமும் வலுப்பெறுவதினால் நமது வாழ்நாள் தானாகவே அதிகரிக்கிறது. அதனால் கட்டாயம் தவறாது உடற்பயிற்சி செய்யுங்கள்.


ஞாபக சக்தி அதிகரிக்கிறது [Gnabaga sakthi adhigarikkum]: 

உடற்பயிற்சி செய்வதன் காரணமாக மூளையில் புதிய செல்கள் வளர தூண்டுகிறது. இதன் மூலம் நமது ஞாபக சக்தி அதிகரிக்கிறது.


இளமையாக காட்சியளிக்க [ Endum ilamaiyaaga kaatchiyalaikkum]: 


வழக்கமாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது உடல் ஆரோக்கியம் அடைவது மட்டுமில்லாது, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைத்து புத்துணர்ச்சி அளிக்கிறது. அதனால் தவறாது தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.


மன அழுத்தத்தை குறைக்கிறது [Mana azhuttham kuraikkiradhu]: 


பல்வேறு காரணங்களால் அலுவலகத்திலும், வீட்டிலும் நமக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது ஓர் நல்ல வழியாகும். உடற்பயிற்சி மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது [Noi edhirppu sakthi adhigarikkum]: 

வழக்கமாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் வலுவடைய செய்யலாம். இதன் மூலம் நமது உடல் பன்மடங்கு ஆரோக்கியம் அடைகிறது .

பசியின்மை சரியாகும் [Pasiyinmai sariyaagum]: 

உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அதிக பசி ஏற்படும் இதன் மூலம் நமது பசியின்மை கோளாறு சீராகும்.


செரிமானத்திற்கு நல்லது [serimaanathirkku nalladhu]: 


தேவையற்ற கொழுப்பை குறைப்பது மட்டுமில்லாது நமது செரிமான கோளாறுகளையும் சீரடைய செய்கிறது உடற்பயிற்சி.


கொழுப்பை சீரமைக்கும் [Koluppai seeramaikkum]: 

தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளை சீரமைக்கிறது மற்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்துக்களையும் சரி செய்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது [Uyar rattha azhuthathai kuraikkiradhu]: 

தவறாது உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடலில் உள்ள உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க இயலும் என பல்வேறு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சர்க்கரை நோய் கட்டுப்படுத்த முடியும் [Sarkkarai noi kattupadum]: 

தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் டைப் 2 நீரழிவு நோயின் அபாயத்தை 50 முதல் 60 சதவீதம் கட்டுப்படுத்த முடியும்.

பொலிவுறும் மேனி [ thol polivu perum] : 

வழக்கமாக உடற்பயிற்சி செய்பவதன் மூலம் பொலிவான மேனியைப் பெறலாம். எனவே தவறாது தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

இதயத்திற்கு வலிமை அளிக்கிறது [Idhayathirkku valimai alikkuradhu]: 

தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் வலிமை அடைவதால், அவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் மிக குறைவாகவே ஏற்படுகிறது. எனவே, இதயம் சார்ந்த நோய்களில் இருந்து விடுப்பட தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம்.

உயரமாக வளர முடியும் [Uyaramaaga valara mudiyum]

 உடற்பயிற்சி செய்வதின் முக்கிய பயன்களில் ஒன்று உயரமடைவது. தவறாது தினசரி உடற்பயிற்சி செய்வதின் மூலம் உயரமாக வளர முடியும்.


கலோரிகளை எரிக்கிறது [Calori selavazhiyum] : 

உடலில் தங்கி கொழுப்பாக மாறும் தேவையற்ற கலோரிகளை உடற்பயிற்சி செய்வதின் மூலம் எரிக்க இயலும். இதனால் உடல்நலம் ஆரோக்கியமடையும்.


புற்றுநோயிலிருந்து காக்கிறது [Puttru noiyilirundhu kaakiradhu]: 

தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும். ஏனெனில் நமது மேற்கத்திய உணவு பழக்க வழக்கங்களினால் பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு இந்நாட்களில் அதிகரித்து காணப்படுகிறது.


எலும்புகளை வலிமையடைய செய்கிறது [Elumbugalai valimai pera seigiradhu]:

மற்றொரு முக்கிய காரணம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது எலும்புகள் வலிமை அடைகிறது.


முதுகு வலி சரியாகும் [Mudhugu vali sariyaagum]

 முதுகு வலி உள்ளவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம்.

மாரடைப்பை குறைக்கும் [Maaradaippu kuraiyum]: 

உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் வலுவடைவதின் காரணமாய் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு. உடற்பயிற்சி செய்பவர்களோடு உடற்பயிற்சி செய்யாதவர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு அதிகமாய் மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே, தவறாது தினசரி உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

இரவு நன்றாக உறங்கலாம் [iravu nalla urakkam]: 

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறுவதால் சோர்வு குறையும். இதன் பயனால் இரவு நேரங்களில் உறக்கமின்மை குறைந்து நன்றாக உறங்கலாம்.

அந்தரங்க வாழ்க்கை நன்றாக [ Andharanga vaazhkkai nandaagum]: 

உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆண்களுக்கு விறைப்பு தன்மை அதிகரிப்பதால், உங்களது அந்தரங்க வாழ்க்கையிலும் மேன்மை ஏற்படும்.


மாதவிடாய் பிரச்சனைகள் குறைகின்றன [ maadhavidaai pirachanai kuraigindrana]:  

உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலமாக பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் நாட்கள் தள்ளி போகும் பிரச்சனைகள் குறைகின்றன.

Health Benefits of regular exercise,thinasari udarpayirchi seivadhaal undaagum nanmaigal, udalpayirchiyin nanmaigal, 24 benefits of everyday fitness