Type Here to Get Search Results !

LED பல்புகளுக்கு பதிலாக புதிதாக வரவிருக்கும் கிராஃபீன் வகை பல்புகள்..

After Tungsten, Fluorescent, CFL now LED bulbs joins the History - Graphene Bulbs is the future of domestic lighting | Graphene in LED Lights

Graphene light Bulbs in LED lights to save power consumption 
எங்கு பார்த்தாலும் குண்டு பல்பு இருந்த காலம் போய் ஃப்ளோரசென்ட் லைட்டிங் என்னும் ட்யூப் லைட் வந்த காலம் போய் சி எஃப் எல் தாக்கம் அதிகரிக்க தொடங்கியபோது எல் ஈ டி விளக்குகள் வந்து இது இன்னும் பிரகாசம் மற்றும் இது மின்சாரத்தை சேமிக்கும் என சொல்லி உலகின் பல கம்பெனிகள் இதை அடாப்ட் செய்யும் நேரத்தில், 2005 ஆண்டு இரண்டு ரஷிய விஞ்சானிகள் கண்டுப்டித்த Graphene என்னும் ஒரு பொருள் உலகில் பல ஆச்சர்யங்களை உருவாக்கி அதை கண்டுபிடித்தவர்களுக்கு கூட 2010 ஆம் ஆண்டு இயற்பியல் துறை நோபல் பரிசு கிடைத்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இப்போது கிராஃபீன் வகை பல்புகள் விளக்குகள் அறிமுகபடுத்தியிருக்கிறது மான்செஸ்ட்டர் பல்கலைகழகம். இது எல் ஈ டி விளக்கை விட மலிவு மற்றும் இன்னும் அதிக பிரகாசமாம். இப்பதானே நாம எல் ஈ டி விளக்குகளை வாங்க ஆரம்பிச்சிருக்கோம் அதற்க்குள்ள இன்னொரு டெக்னாலஜியா நீங்க கேட்டாலும் இனிமே கிராஃபீன் விளக்குகள் தான் எதிர்காலமாம். மலிவு விலை மற்றும் அதிக பிரகாசம் என்ற இரட்டிப்பு மகிழ்ச்சியில் இனிமே இந்த வகை விளக்குகள் மார்க்கெட்டை அடைய அதிக தூரம் இல்லையாம் இன்னும் சில மாதங்களிலே வருகிறதாம். ஏற்கனவே உலகில் பல்புகளை தயாரிக்கும் 67 கம்பெனிகள் இந்த ஆராய்ச்சியில் முழு திருப்தி அடைந்து வெகு சீக்கிரம் அதை தயாரிக்க போகிறதாம்.

கடைசி தகவல் - கிராஃபீன் என்னும் பொருளை வைத்து சட்டை கூட தைக்கலாம் - ஆனால் கிராஃபீன் இரும்பை விட 200 மடங்கு சக்தி வாய்ந்தது மற்றும் வைரத்தை விட கூட சக்தி வாய்ந்த இந்த நூற்றான்டின் சிறந்த கண்டுபிடிப்பு.

Credits to Ravi Nag
 Graphene lightbulb news
After Tungsten, Fluorescent, CFL now LED bulbs joins the History - Graphene Bulbs is the future of domestic lighting | Graphene in LED Lights, Graphene light bulbs are coming this year