Peyar kettuvittu suttu kollum thirudan | Mercy thief joke in tamil
திருடன் துப்பாக்கி முனையில் வீட்டிலிருந்த பொருள்களைக் கொள்ளையடித்து மூட்டையாகக் கட்டினான்.
பிறகு,”நான் வழக்கமாகக் கொள்ளையடிக்கும் வீட்டில் உள்ளவரின் பெயரைக் கேட்டுவிட்டு, அவரைச் சுட்டுக் கொல்வேன்” என்று சொன்ன திருடன் அந்தப் பெண்ணின் பெயரைக் கேட்டான்.
வீட்டிலிருந்த அந்தப் பெண் ”லக்ஷ்மி’ என்று சொன்னாள்.
அதைக் கேட்ட திருடன் ”லக்ஷ்மி என்பது என் அம்மாவின் பெயர். அதனால் உங்களைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை” என்று சொல்லிவிட்டு, கணவன் பக்கம் திரும்பி பெயரைக் கேட்டான்.
கணவன் நடுங்கியபடி பதில் சொன்னான்:
”என் பெயர் கோபால். என் நண்பர்கள் எல்லோரும் என்னை லக்ஷ்மி…லக்ஷ்மி என்றுதான் கூப்பிடுவார்கள்”.
இது எப்படி இருக்கு.. Thief joke in tamil, tamil jokes, sirippu comedy, vaai vittu siringa noi vittu pogum,
Social Plugin