Pericham pazham sappiduvadhaal erppadum theemaigal | bad side effects of dates
பேரிச்சம் பழத்தில் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், அதில் உள்ள சில தீமைகள் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
குளுகோசை விடவும் அடர்த்தியான சர்க்கரை பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ளது, எனவே டைப்-2(type-2 diabetes) வகை நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும், இதய நோய் ஏற்படவும் வழிவகுக்கும் .
பேரிச்சம் பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் பற்களை சொத்தையாக்கி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, மேலும் அதிகமாக சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்கும், இதய நோய் ஏற்பட வழிவகுக்கும் தன்மையும் கொண்டது.
பேரிச்சம் பழத்தை கடைகளில் வாங்கும் போது கவனம் அவசியம். பார்த்த உடனே மக்கள் விரும்பி வாங்க வேண்டும் என்பதற்காக, பேரிச்சம் பழத்தின் மீது மெழுகு போன்ற பொருட்களை தடவி விற்பனை செய்கின்றனர், இப்படிப்பட்ட பேரிச்சம் பழத்தை வாங்கி உட்கொள்ளும் போது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.
நாள்பட்ட பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் குடலில் அடைப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
இதே போன்று கர்ப்பிணி பெண்களும் தரமான பேரிச்சை பழத்தை உட் கொள்வது அவசியம்.
குழந்தைகளுக்கு பேரிச்சம் பழம்: ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு பேரிச்சம் பழம் உகந்தது அல்ல, ஏனெனில் இதன் அதிகப்படியான நார்ச்சத்து குழந்தைகளின் குடலை பாதிக்கும் அபாயம் உள்ளது.
Pericham pazham sappiduvadhaal erppadum theemaigal | bad effects of dates, type 2 diabetics by dates fruit, sarkkarai noikku pericham palam ugandhadhu alla, udal paruman, udal edai adhigarikka seiyyum periccham pazham, dat
Social Plugin