Idi minnal nerathil paadhugappaga irukka sila tips.. Some tips to stay safe during thunder storms ...
- இடி, மின்னல் இருக்கும் போது கதவு அல்லது ஜன்னல் பக்கம் நிற்க கூடாது.
- செல்போன் மற்றும் தொலைப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது.
- ஐபாட், இயர்போன் (Ear Phone), வாக்மேன் (walkman) போன்றவற்றைத் தூக்கி தூர வைத்து விட வேண்டும்.
- டீவி, கம்ப்யூட்டர், மிக்ஸி, இணையதள மோடம் போன்றவற்றை அணைத்து அதற்கான இணைப்புகளைத் துண்டித்து விடவேண்டும், முக்கியமாக வீட்டிலுள்ள மின் சாதனங்களை இயக்க வேண்டாம்.
- உலோகத் தூண்கள், டீவி, ஆண்டெனா, உலோகத்திலான கொடி மரங்கள் அருகில் நிற்க வேண்டாம்.
- ஏரி, குளம், மலை உச்சி போன்ற பகுதிகளில் இருந்தால், அங்கிருந்து நகர்ந்துவிடுவது மிக மிக நல்லது.
- இடி, மின்னல் தாக்கும்போது திறந்தவெளியில் நிற்கவேண்டாம்.
- மரத்தின் அடியிலோ, பேருந்து நிழற்குடையின் கீழோ இருக்கக் கூடாது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு விலக வேண்டும்.
- மின் வாரியத்தின் மின் மாற்றிகள், துணை மின் நிலையத்துக்காக போடப்பட்டுள்ள வேலி அருகே சிறுநீர் கழிக்கக்கூடாது. இவற்றின் அருகில் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
- மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும்.
- மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்கக் கூடாது. உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயனப் பொடி அல்லது கரியமில வாயு தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Social Plugin