Vallaarai keeraiyin nanmaigal - iyarkai unavugal
ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது வல்லாரை கீரை(Centella asiatica) என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் வல்லாரை கீரையை குறைந்த அளவுதான் சாப்பிட வேண்டும். அளவு மீறினால் மயக்கம் வரும், தலை சுற்றல் ஏற்படும். உடம்பை பிழிவதைப் போல வலி ஏற்படும். எனவே இக் கீரையை அடிக்கடி உண்ணாமல் பத்து நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவதே நல்லது. இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.சரி அவ்வாறு வல்லாரை கீரையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என பார்ப்போமா..
வல்லாரையின் மருத்துவ குணங்கள்:
- ஞாபகசக்தியை அதிகரிக்க செய்கிறது.
- ஆயுளைப் பெருக்கும்.
- குறிப்பாக இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
- மூளை பலப்படும்.
- வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
- வயிற்றுக் கிருமிகளை வெளியேற்றி விடும்.
- கால், கை வலிப்பு நோயை கட்டுப் படுத்தும்.
- தாதுவை கெட்டிப்படுத்தும்.
- மாலைக்கண் நோயை நிவர்த்தியாக்கும்.
- மாரடைப்பு வருவதை தவிர்க்கும்.
- யானைக்கால் நோயை ஆரம்பித்திலேயே வராமல் தடுத்துவிடும்.
- நரம்புக் கோளாறுகளை நீக்கும்.
- பெண்களின் மாதாந்திரப் பிரச்னைகளை தீர்க்கும்.
- நீர்ச் சுருக்கு நீங்கும், மூலச்சூடு அகலும்.
- பலவீனம் நீங்கும், சளியை முறிக்கும்.
- இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்
Social Plugin