Neerilivu noikku unavu kattuppadu - நீரிழிவு நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு
உணவுக் கட்டுப்பாடு நீரிழிவு சிகிச்சை முறையில் முதலிடம் வகிக்கின்றது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அரிசி உணைவத் தவிர்த்து கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள் மட்டுமே உண்ண வேண்டும் என்று தேவையில்லை எந்த வகையான தானியம் உட்கொள்கிறோம் என்பதை விட எந்த அளவிற்கு உட்கொள்கிறோம் என்பதே முக்கியமாகும்.
குறிப்பிட்ட உணவு வகைகள் குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.
**உணவு உண்ணாமலிருப்பது, அளவிற்கு மேல் உண்பது இரண்டுமே கூடாது.
தவிர்க்க வேண்டிய உணவு வைககள்: இனிப்புகள், தேன், வெல்லம், சர்க்கரை கலந்த பலகாரங்கள். கேக், பிஸ்கெட், ஐஸ்கிரீம்.
வெண்ணெய், நெய், பொரித்த உணவு வகைகள். மதுபானங்கள், குளிர்பானங்கள், ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா. உலர்ந்த பழ வகைகள், கொட்டைப் பருப்பு (முந்திரி, பாதாம், பிஸ்தா). எண்ணெயில் தயாரித்த ஊறுகாய், வாழைப்பழம், அசைவ உணவுகளில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதை தினமும் சாப்பிட்டால் எடை குறையாது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவும் குறையாது. எனவேதான் வாரம் ஒருமுறைக்கு மேல் அசைவ உணவு சாப்பிடுவைதத் தவிர்க்க வேண்டும்.
தாராளமாக சாப்பிடக் கூடியவை: கீரை வகைகள், வெள்ளரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கத்தரிக்காய், புடலங்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், குடைமிளகாய், பப்பாளிக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, தக்காளி, சௗெசௗெ, அவரைக்காய், முட்டைக்கோஸ், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா, காய்கறி சூப், எலுமிச்சை.
சாப்பிடக் கூடிய பழவகைகளின் அளவு: சாத்துக்குடி - 1, ஆரஞ்சு - 1, கொய்யா - 1, ஆப்பிள் - அரை, திராட்சை - 15, பிளம்ஸ் - அரை, தற்பூசணி - 1 பெரிய துண்டு, மாதுளை - அரை, பலா - 3 சுளைகள், அன்னாசி - 2 சிறிய துண்டுகள், பப்பாளி - 1 பெரிய துண்டு.
சரியான உணவு: உணவுக் கட்டுப்பாடு என்பது நீரிழிவு நோயாளியின் உயரத்திற்கும், எடைக்கும், செய்யும் தொழிலுக்கும் ஏற்ப கணக்கிடப்படுகிறது.
காலை 6 மணி: காபி அல்லது தேநீர் 1 கப், சர்க்காரை இல்லாமல்.
காலை 8 மணி: இட்லி - 4, அல்லது தோசை - 4 அல்லது சப்பாத்தி - 4 அல்லது இடியாப்பம் - 4, உடன் சட்னி அரை கப் அல்லது ரொட்டி 4 துண்டுகள்.
முற்பகல் 11 மணி: மோர் அல்லது தக்காளி அல்லது பருப்பு அல்லது காய்கறி சூப் அல்லது 1 டம்ளர் எலுமிச்சை சாறுடன் வெள்ளரிக்காய் - 1 கப்.
பகல் 1 மணி: சோறு - 2 கப், சாம்பார் 1/4 கப், கீரை - 1 கப், காய்கறி - 1/2 கப், ரசம் - 1 கப், கோழி - 75 கிராம் அல்லது கறி - 50 கிராம் அல்லது மீன் - 75 கிராம் அல்லது முட்டை வெள்ளைக்கரு அல்லது சுண்டல் 1/4 கப்.
மாலை 5 மணி: காபி அல்லது தேநீர் - 1 கப் (சர்க்கரை இல்லாதது), வடை - 1
அல்லது மாரி பிஸ்கட் - 2.
இரவு 8 மணி: காலை அல்லது மத்தியானம் சாப்பாடைப் போல் பாதி அளவு.
இரவு 10 மணி: பால் அரை கப், பழம் சிறியது - 1.
Neerilivu noikku unavu kattuppadu - நீரிழிவு நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு #diabeticsfoods #tamilhealth sarkkarai noi, foods for sugar patient, best food control tips for sugar control, neerizhivu noikku unavu kattuppadugal, kaalai unavu, madhuya unavu, iravu unavu, maalai unavu, sappida vendiya palangal, vellam, cake, biscut, ice cream unavu muraigal, thavirkka vendiya unavu , sarkkarai noi, sakkarai viyadhi unavugal,