Babar Ali, 16 year old youngest school head master in the world
BBC-Radio (Youngest Head Master In the World) விருதை 16 வயது சின்ன பையனுக்கு கொடுத்தபோது நிறைய பேர் அதிர்ந்துதான் போனார்கள். அதே வருடம் CNN – IBN நிறுவனம் உண்மை நாயகன் விருது( Real Hero Award) கொடுத்தது.
அப்படி அந்த பையன் என்னதான் செய்தான்?
பெயர் பாபர் அலி. பள்ளிக்கூடம் இல்லாத கிராமத்தில்( முர்ஷிதாப்த், மேற்குவங்கம் )பிறந்து தினமும் 10 கிலோமீட்டர் நடந்து சென்று பள்ளியில் படித்துக்கொண்டே அவ்வளவு தூரம் நடந்து சென்று படிக்க இயலாதவர்களுக்கு தனது வீட்டு கொல்லைபுரத்தில் ஆரம்பித்த பள்ளிக்கூடம் முதலில் 5 பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க ஆரம்பித்தது இன்று 1000 பேர் படிகிறார்கள்.. காலம் நேரம் எல்லாம் கிடையாது, வயது வித்தியாசமும் கிடையாது.
பாபரின் பாட்டி மணி அடிக்கும்போது அனைவரும் கூடி விடுவார்கள். இன்று 10 ஆசிரியைகள் வேலை பார்க்கும் பள்ளி இயங்குவது ஒரே ஒரு குண்டு பல்பில்.. 5 வயது குழந்தை முதல் 50 வயது பாட்டி வரை படிக்கும் அதிசய பள்ளி இது...