Mushroom Capsicum Salad Recipe in Tamil | Samayal seimurai
Mushroom Capsicum Salad Recipe |
தேவையான சமையல் பொருள்கள்:
1. மஷ்ரூம்(காளான்) - 8,
2. குடை மிளகாய் - 2,
3. பெரிய வெங்காயம் - 1,
4. தக்காளி - 2,
5. எலுமிச்சம் பழச் சாறு - 2 தேக்கரண்டி,
6. சாட் மசாலா - 2 தேக்கரண்டி,
7. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
8. மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
மஷ்ரூம் கேப்ஸிகம் சாலட்(Mushroom Capsicum Salad) செய்முறை:
மஷ்ரூம், குடை மிளகாய், பெரிய வெங்காயம், தக்காளி இவற்றைச் சின்னச் சின்ன சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கி பிறகு மஷ்ரூம், தக்காளி, உப்பு சேர்த்து மேலும் ஒரு 5 நிமிடம் வதக்கி சாட் மசாலா, மிளகுத்தூள், எலுமிச்சம் பழச்சாறு, சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளற மஷ்ரூம் கேப்ஸிகம் சாலட் சாப்பிட ரெடி.
காளான் குடைமிளகாய் சாலடை தனியாகவும், சாதத்துடன் கலந்தும் அல்லது நாண், பரோட்டா, சப்பாத்திக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
Mushroom Capsicum Salad Recipe in Tamil | Samayal seimurai, Tamil recipes guide, Kaalaan kudaimilagai salad seimurai vilakkam, Samayal kurippugal, tamil cooking steps, kaalan poriyal, kalan samayal Mushroom Masala
Social Plugin