Type Here to Get Search Results !

கணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவில் தடையிருந்தால் விவாகரத்து பெறலாம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி

0
கணவன் மனைவி  என்றால் இருவருக்குமிடையே தாம்பத்திய உறவு சுமூகமாக இருக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் இருவரில் யாராவது ஒருவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். இப்படிருக்க, கணவனோ அல்லது மனைவியோ தாம்பத்திய உறவை அனுமதிக்க மறுப்பதை காரணமாக வைத்து, விவாகரத்து அளிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

விவாகரத்து வழக்கு:

இந்தியாவை சேர்ந்த ஒருவர்  லண்டனில் வசித்து வருகிறார். அவர் மனைவியிடம் விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில், தன் மனைவி தன்னை மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

அதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அவருடைய மனைவி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தனக்கு குழந்தை பெற விருப்பம் இல்லாததால், தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுத்ததாக கூறி இருந்தார். ஆனால் அதை ஐகோர்ட்டு ஏற்றுக்கொள்ளவில்லை.
husband and wife can get divorce if anyone rejects sexual desire, indian Supreme court law about getting divorce

‘நீங்கள் இருவரும் படித்தவர்கள். எத்தனையோ கருத்தடை முறைகள் உள்ளன. நீங்கள் விரும்பினால், அதை பயன்படுத்தி, கர்ப்பத்தை தடுத்து விடலாம்’ என்று கூறிய நீதிபதிகள், இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்தனர்.
அப்பீல்

அதை எதிர்த்து, அப்பெண் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அம்மனு, நீதிபதி எஸ்.ஜே.முகோபாத்யாயா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்திய நீதிபதிகள், பெண்ணின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–

கணவனோ அல்லது மனைவியோ, போதிய காரணம் இல்லாமல், ஒருவர் மற்றவருடன் நீண்ட காலமாக தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுத்து வருவது மனரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும். இதன் அடிப்படையில், விவாகரத்து வழங்க முடியும். ஆகையால் தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுத்ததற்கு அந்த பெண் கூறிய காரணத்தை ஏற்க முடியாது.

ரூ.40 லட்சம் ஜீவனாம்சம்

இருப்பினும், இந்த வழக்கின் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், இருதரப்பின் பொருளாதார சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, அந்த பெண்ணுக்கு அவருடைய கணவர் ஒரே முறை ஜீவனாம்சமாக ரூ.40 லட்சம் வழங்குமாறு உத்தரவிடுகிறோம். என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

husband and wife can get divorce if anyone rejects sexual desire, indian Supreme court law about getting divorce, thambathiya uravil thadai irundhaal vivagaratthu kodukkalam supreme court uttharavu, andharangam, needhimandram utharavu, chennai high court order for marriage divorce, kanavan manaivi vivagaraththu perum vasadhi, udaluravil porachanai, illara inbam illai, vivagaratthu peruvadhu eppadi

கருத்துரையிடுக

0 கருத்துகள்