நேந்திர வாழைக்காய் வைத்து சமையல் செய்யலாம் வாங்க..!!
- நேந்திரங்காய் - 2
- சர்க்கரை - 50 கிராம்
- வெல்லம் - 200 கிராம்
- அரசி மாவு
- சுக்குப் பொடி - தலா 50 கிராம்
- ஏலக்காய் - 3
- தேங்காய் எண்ணெய் - 250 மி.லி

குக் செய்யும் முறை:
நேந்திரங்காயைத் தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாக வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சூடேற்றிப் பாகு பதம் வந்ததும் வறுத்த நேந்திரங்காயைச் சேர்த்துக் கிளறவும். அதில் அரிசி மாவைத் தூவி, சுக்கு, ஏலக்காய், சர்க்கரை சேர்த்து இறக்கிவைக்கவும். இதை மாதக் கணக்கில் வைத்துச் சாப்பிடலாம்.
செய்தவர்: லீனா தம்பி
(தி இந்து நாளிதழில் வெளிவந்த சமையல் )
Social Plugin