Type Here to Get Search Results !

தவறாக செய்தி உச்ச்சரிதவரை வேலையை விட்டே விரட்டிய இந்திய தூர்தர்சன் தொலைகாட்சி ..!

0
இந்திய அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில், சீன அதிபரின் பெயரை தவறாக வாசித்த செய்தி வாசிப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சீன அதிபர் 'ஜி ஜின்பிங்' (Xi Jinping) 3 நாள் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இது தொடர்பான செய்தியை அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் ஒரு நாள் மாலையில் ஒளிபரப்பியது.

அப்போது, செய்தி வாசிப்பாளர் சீன அதிபர் பெயரின் முதல் இரு ஆங்கில எழுத்துக்களான ‘xi’ என்பதை ‘ஜீ’ என உச்சரிப்பதற்குப் பதிலாக அதை  ‘11‘ (இலெவன்) என்னும் ரோமானிய எண்ணைக் குறிக்கும் எழுத்துக்கள் என்று நினைத்து ‘லெவன் ஜின்பிங்’ என வாசித்து விட்டார்.


இது தூர்தர்ஷன் நிர்வாகத்தின் காதிற்கு சென்றது இதையடுத்து சீன அதிபரின் பெயரை தவறாக உச்சரித்த அந்த செய்தி வாசிப்பாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவர் தற்காலிக செய்தி வாசிப்பாளர் என்றும், வழக்கமான செய்தி வாசிப்பாளர் விடுப்பில் இருக்கிறபோது, இத்தகைய தற்காலிக செய்தி வாசிப்பாளர்களின் பணி பயன்படுத்தப்படுகிறது என்றும் தூர்தர்ஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

chinese prime minister name misread employee sacked by doordarshan yv channel, vnodha seidhigal,daily tamil news, popular news

கருத்துரையிடுக

0 கருத்துகள்