சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த "சுத்தமான இந்தியா' என்ற திட்டத்தை தொடங்கி வைத்ததுடன், பெண்கள் பள்ளிகளில் கழிவறைகள் கட்ட எம்.பி.க்களும், பெருநிறுவனங்களும் உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இதுகுறித்து டி.சி.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது;
நாடு முழுவதும் உள்ள பெண்கள் பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, 10,000 கழிவறைகள் கட்ட ரூ.100 கோடி வழங்க டி.சி.எஸ். நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சுத்தமான இந்தியா திட்டத்துக்கு உதவும் முயற்சியாக டி.சி.எஸ். நிறுவனம் இந்த நிதியை ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தது.
இந்த
நிதியின் மூலம் கட்டப்படும் கழிவறைகள், பெண் மாணவிகளுக்கு பெரும் உதவியாக
இருக்கும் என்று அதன் தலைமை நிர்வாகி சந்திரசேகரன் கூறினார்.
Social Plugin