ஒருத்தருக்கு தொப்பை இருந்தாலே
எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க. சரக்கடிப்பானோ?! எந்த வேலை வெட்டிக்கும்
போகாம திண்ணுட்டு திண்ணுட்டு தூங்குவானோ இல்லை உடம்புக்கு சரியில்லையோன்னு
நினைச்சுப்பாங்க.
Thondhi thoppai nanmaigal | periya thoppai vayiru joke | Tamil comedy post
பஸ்சுல கூட்டத்துல நிக்குறதுக்கு சிரமம், ரெடிமேட் சட்டை, டிஷர்ட், ஃபேண்ட் சரியான சைசுக்கு கிடைக்காது. சின்ன சந்துல நுழைஞ்சு போக முடியாது, விடிகாலைல போர்வைக்குள்ள சுருண்டு படுத்துக் கிடக்கும் சுகத்தை இழந்து வாக்கிங், ஜாக்கிங் போகனும், வெளிய விசேஷங்களுக்கு போனால் பசிச்சாலும் கொஞ்சமா சாப்பிடனும் (இல்லாட்டி, இப்படி திங்குறதுனாலதான் தொப்பை வந்திருக்குன்னு கேலிக்கு ஆளாகனும்), பிளட், சுகர்லாம் கரெக்டா செக்கப் பண்றீங்களான்னு தொப்பையா பார்த்துக்கிட்டே கேட்பாங்க.
இப்படி சின்ன சின்ன இழப்புகளை
தினம் தினம் சந்திக்கனும். ஆனா, தொப்பை இருக்குறதால நன்மைகளும்
கிடைக்குதுங்க. அதனால, இனி தொப்பை இருக்குறவங்க, சங்கோஜப்படாம,
சந்தோஷப்பட்டுக்கிட்டு உங்களை கேலி பண்றவங்ககிட்டயும் நன்மைகளை எடுத்து
சொல்லுங்க.....
தொந்தி, தொப்பை, செல்லதொப்பைன்னு பல பேர்களால் ஆசையுடன் அழைக்கும் தொப்பையின் நன்மையை பற்றி இனி காண்போம்....
1. கீழே குப்புற விழுந்தா முகத்தில அடிபட்டு மூக்கு உடையாம தொப்பைதான் காப்பாத்தும்.
2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை
ஏற்படுத்துது. உதாரணத்துக்கு பெரிய பெரிய தொந்திகளை இருக்குற போலீசாரை
கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் வரும். அதுப்போல உங்களையும் பெரிய
போலீஸ் ஆபீசர்ன்னு நினைச்சு எல்லாரும் பயந்து ஒதுங்குவாங்க.
3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக
பயன்படுது. உதாரணத்துக்கு வேலையில்லாமல் சும்மா உக்காந்திருக்கும் போது
தொந்தியை மெதுவாக வருடிக்கிட்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
4. மல்லாக்க படுத்து இருந்தால்
குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது
செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு
மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.
5. அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்க பார்க்கலாம். ஏன்னா. ஒருத்தரோட தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.
தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.
என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.
தொந்தி ஏன் சதுரமா இல்ல செவ்வகமாக இல்லாம உருண்டை வடிவத்தில இருக்துது?ன்னு எல்லார் மனதசுலயும் கேள்வி எழும்.
தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.
இந்த உலகமானது தொந்தியைப் போலவே
உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு
உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில்
படைத்துள்ளது.
ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான்.
பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த
நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை
போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!
ஜெய் தொந்தி!
நன்றி: மெயில் அனுப்பிய புண்ணியவானுக்கு...,