சமீபத்தில் வளர்ந்துள்ள மொபைல் போன் பயன்பாட்டின் மூலம் நீரிழிவு நோய், சிறுநீரக நோய், மற்றும் சிறுநீர் பாதை நோய் தொற்று போன்றவைகளை கண்காணிப்பு செய்ய முடியும். மேலும் வளரும் நாடுகளில் நோய் தொற்றுகள் பரவுவதை மெதுவாக குறைக்கவும் முடியும் என கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த மொபைல் போன் அப்ளிகசனை கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதில் உள்ள நிறம் அறியும் (Colorimetrix ) திறனை பயன்படுத்தி நமது வீட்டிலேயே நாமே சில எளிய மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ளலாம். செய்யப்பட்ட பரிசொதனியின் ரிசல்ட் மருத்துவர்களுக்கு தானாக அனுப்பும் வசதியும் உள்ளது.
மொபைல் போன் கேமரா உதவி கொண்டு சிறுநீர் நிறம், உமிழ்நீர் நிறம் மற்றும் இதர உடல் பாக நிறங்களை படம் எடுத்தால் அந்த அப்ப்ளிகேசன் நிறங்களை துல்லியமாக கணக்கிட்டு அதில் ஏற்கனவே விஞ்ஞானிகளால் பதியப்பட்டுள்ள அளவுகளுடன் ஒப்பிடுகிறது, பிறகு பரிசோதனையின் கடைசி ரிசல்டை துல்லியாமாக தருகிறது.
இந்த மொபைல் அப்ப்ளிகேசன் எச்.ஐ. வி, காச நோய், மலேரியா, மற்றும் பல தோற்று நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் உதவும் சாத்தியத்தை கொண்டுள்ளது.
Social Plugin