இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் ஆபத்தான திட்டம் ஆதார் அடையாள அட்டை திட்டம். பாஜ ஆட்சிக்கு வந்தால் ஆதார் மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்படும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளையும் ஆதார் திட்டம் மீறியுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக திரட்டப்பட்ட இந்திய மக்களை பற்றிய தகவல்கள் வெளிநாடுகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தானது. வங்கதேசத்திலிருந்து 3 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆதார் திட்டத்துக்கு நாடாளுமன்ற நிலைக்குழுவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 33 உறுப்பினர்களில் 31 பேர் இந்த திட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர். இருப்பினும் இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. ஆதார் அட்டையின் நம்பகத்தன்மையை குறித்து சுப்ரீம் கோர்ட்டும் கேள்வி எழுப்பியுள்ளது. ஆதார் திட்டத்துக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு மீனாட்சி லெக்கி கூறினார்.
ஆதார் திட்டத்தை பாஜ தலைவர் அனந்த்குமாரும் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சட்டவிரோதமாக ஒருவர் ஒரு நாட்டுக்கு நுழைய முயன்றால் அவரை எல்லையில் பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொல்வார்கள். அல்லது சிறையில் தள்ளுவார்கள். ஆனால் இந்தியாவில் சட்டவிரோதமாக யார் நுழைந்தாலும் அவர்களுக்கு ஆதார் அட்டை கொடுத்து குடிமகன் அந்தஸ்து வழங்கப்படுகிறது. அசாமில் வசிப்பவர்களில் பாதிக்கும் அதிகமானோர் வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள். ஆதார் மிகப்பெரிய மோசடி திட்டம் என்றார்.
நன்றி தமிழ்முரசு
இணையத்தில் தமிழில் எழுத இங்கே செல்லவும் - www.typetamil.in