சென்னையில் 65 இடங்களில் தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிக் கிளைகளின் அருகேயும் இந்த தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாகவும், 1, 2, 5 மற்றும் 10 நாணயங்களை இந்த தானியங்கி இயந்திரங்கள் மூலமாகப் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், ரூ.100 மற்றும் அதற்கும் குறைவாக ரூ.50, ரூ.20, ரூ.10க்கு சில்லறை பெறலாம் என்றும், ரூ.500க்கு சில்லறை வேண்டும் என்றால், 5 நூறு ரூபாய்களை செலுத்தி சில்லறை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.