இதுவரை பொதுவாக அவர்களைத்தான் நல்ல பிள்ளைகள் என்று கூறிவந்திருக்கிறார்கள். ஆனால், இரவில் நீண்ட நேரம் கண் விழிக்கும் 'இரவுப் பறவைகள்', சீக்கிரமே தூங்கிவிடுபவர்களை விட புத்திசாலிகளாகத் திகழலாம் என்கிறது ஒரு புதிய ஆய்வு. இதுதொடர்பான ஆய்வை மாட்ரிட் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.
அப்போது, இரவில் நீண்டநேரம் விழித்திருப்பவர்கள் நல்ல பிரகாசமாக இருப்பது தெரியவந்தது. அவர்கள் நல்ல வேலைகளிலும் இருந்தார்கள், அதிக வருவாய் ஈட்டினார்கள். காலையில் சீக்கிரமாக எழுபவர்கள், இரவுப் பறவைகளுக்கு இணையாக இல்லை என்றபோதும், பள்ளிகளில் நல்ல ரேங்க் பெற்றார்கள்.
ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 'ராக்கோழிகள்' முன்னிற்கிறார்கள். சீக்கிரமாகத் தூங்குபவர்கள், தாமதமாகத் தூங்குபவர்கள் ஆகிய இரு தரப்பினரிடமும் ஆய்வு மேற்கொண்டு, கிடைத்த முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தார்கள் ஆய்வாளர்கள். இந்த இரு வகையினரையும் அவர்களின் உடல் கடிகாரம்தான் அப்படி வைத்திருக்கிறது.
இரவில் விழித்திருப்பவர்களுக்கு இரவில்தான் அறிவு உச்சத்தில் இருக்கிறது. சீக்கிரம் விழிப்பவர்களுக்கு காலையில் அறிவுத்திறன் உச்சத்தில் இருக்கிறது. இந்த ஆய்வில் குறிப்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட டீனேஜ் பருவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் பல்வேறு வகையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
பள்ளியில் அவர்களின் செயல்பாடு, இயல்பான அறிவுத்திறன் எல்லாமே அளவிடப்பட்டன. அப்போது இரவுப் பறவைகளுக்குத்தான் புத்திசாலித்தனம் அதிகம் என்பது உறுதி செய்யப்பட்டது. 'அதிகாலைச் சேவல்கள்' அதிகம் பின்தங்கிவிட வில்லை என்றபோதும், அவர்கள் எதிர்த்தரப்பினரை விட அறிவில் கொஞ்சம் கம்மிதான் என்பது ஆய்வாளர்கள் கருத்து. காலையில் தாமதமாக எழுபவர்கள் இனி இதைச் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்!
Credits : maalaimalar .com