Type Here to Get Search Results !

செல்போனில் அதிகம் பேசுபவரா நீங்கள்?.. உடனே படியுங்கள் அதிர்ச்சி தகவல்களை...

Cell phone health problems | செல்போன் பயன்படுத்துவதை குறைத்து ஆபத்துகளிலிருந்து தப்பித்து கொள்ளவேண்டும் | How to use cell phones?

Cell phone health problems | செல்போன் பயன்படுத்துவதை குறைத்து ஆபத்துகளிலிருந்து தப்பித்து கொள்ளவேண்டும் | How to use cell phones
அறிவியல் தந்த அரிய கண்டுபிடிப்பு செல்போன்.........மொபைல் போன் இல்லாத ஆள் இன்று உலகில் யாருமே இல்லை என்ற அளவுக்கு இதன் வளர்ச்சி உள்ளது... ஆனால் எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து தானே....இதற்க்கு செல்போனும் விதிவிலக்கல்ல....செல்போனின் தீங்குகள் பற்றி படித்தேன்......படிக்கவே பயமாக இருந்தது......
செல்போனை இடுப்பு பெல்ட்டில் சொருகி வைத்திருப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து குழந்தை பேறு இல்லாமல் போவது குறித்து பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதேபோல் மடிக் கணினிகளை மடியில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பயன்படுத்துவதும் இதே பிரச்னையை ஏற்படுத்துகிறது.
செல்போனை வெறுமனே (பேசாத போதும்) சொருகி வைத்திருந்தாலும் இந்த பிரச்னை ஏற்படும். தொடர்ந்து 4 மணி நேரம் செல்போனில் பேசினாலும் பாதிப்புதான். செக்சில் ஆர்வத்தைஏற்படுத்தும் டெஸ்டோடிரான் என்ற ஹார்மோன்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் ஆண்மை குறைவு ஏற்படுகிறதாம்.....
மேலும் செல்போனில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும். கவனிக்காமல் விட்டால் காது கேட்காது. அதுமட்டுமின்றி காதில், மூளையில் கட்டிகள் ஏற்படும். இது கேன்சர் கட்டியாகவும் இருக்கலாம். சிந்தனைத் திறன் குறையும். நினைவாற்றல் குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும்.
காதில் முதலில் வலி தோன்றுவதுதான் முதல் எச்சரிக்கை. அடுத்து கேட்கிற தன்மை குறையும். பின்னர் காதில் இரைச்சல் கேட்கும். இது இறுதியான எச்சரிக்கை. அதற்கு பிறகும் செல்போனில் பேசுவதை குறைத்து டாக்டரை அணுகாவிட்டால் பிரச்னைதான்.
யாராக இருந்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அவசியம் என்றால் வீட்டுக்குப் போய் நிதானமாக சாதாரண தொலைபேசியில் பேசிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தால் காது கேளாதவர்கள் பட்டியலில் சேர வேண்டியதுதான்.
செல்போனை அப்படியே காதில் வைத்தோ அல்லது புளூடூத் பயன்படுத்தி பேசுவதை விட ஹெட்போன்(ஹாண்ட்ஸ் ஃப்ரீ) பயன்படுத்தி பேசுவது ஓரளவுக்கு பாதுகாப்பானது. அதேபோல் சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும போது பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்....சார்ஜ் குறைவாக இருக்கும்போதும் பேசுவதை தவிர்க்க வேண்டும்..அந்த நேரத்தில் கதிர் வீச்சின் அளவு அதிகமாக இருக்கும்...
என்னங்க படிக்க படிக்க உங்களுக்கும் பயமா இருக்கிறதா? நாம்தான் இனி செல்போன் பயன்படுத்துவதை குறைத்து இந்த மாதிரியான ஆபத்துகளிலிருந்து தப்பித்து கொள்ளவேண்டும்.........
நம் வாழ்க்கை நம் ( செல்போன்) கையில் தான்.............

Cell phone health problems | செல்போன் பயன்படுத்துவதை குறைத்து ஆபத்துகளிலிருந்து தப்பித்து கொள்ளவேண்டும் | mobile phone heart problems reproduction hormone problems by cell phone | How to use cell phones

Cell phone health problems | செல்போன் பயன்படுத்துவதை குறைத்து ஆபத்துகளிலிருந்து தப்பித்து கொள்ளவேண்டும் | mobile phone heart problems reproduction hormone problems by cell phone | How to use cell phones