பெரிய இடத்து பேரன்களின் தயாரிப்பு, தயாரிப்பு பணத்துக்கு பஞ்சம்
இருக்காது, கலகலப்பு சிவா, அமெரிக்கா பிரியா ஆனந்த், சந்தானம் என வெயிட்டாக
இருக்கும் என்று படத்திற்கு போனால் சந்தர்ப்ப வசத்தில் ஹீரோயினும்
ஹீரோவும் கணவன் மனைவி என்று பொய் சொல்லி ஒரே வீட்டில் வாடகைக்கு
தங்குகிறார்கள், போலிஸ் சிடம் கணவன் மனைவி என்று பொய் சொல்கிறார்கள்,
அதற்குள் சிவாவுக்கு ஹீரோயின் மீது காதல் வருகிறது, ஹீரோயினோ வேறு ஒருவரை
காதலிக்கிறார் அவர் வரவுக்கு காத்திருக்கிறார். அடுத்தவன் காதலி ஹீரோவை
காதலித்தாரா இது தான் கதை, திரைக்கதை. இதில் நடுத்தெரு நாராயணன் என்று
சந்தானமும்.
உப்புசப்பில்லாத கதை, கதையோடு ஒட்டாத திரைக்கதை, சிரிப்பே வராத காமெடி என ஒரு மொக்கை படத்திற்கான அத்தனை அம்சங்களும் நிறைந்த படம்.
சிவா இப்படியே ஒரே மாதிரி நடித்துக்கொண்டிருந்தால் ஹீரோவாகவும் முடியாமல்
காமெடியனாகவும் முடியாமல் ஃபீல்ட் அவுட் ஆக வேண்டியிருக்கும், ஆளில்லாத
ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை கதையாக வடிவேலுவோ வேறு ஒரு நல்ல காமெடியனோ
இல்லாத கேப்பில் சந்தானம் சம்பாதித்து வருகிறார் என்பதை இந்த படத்தில்
மீண்டும் நிரூபித்துள்ளார்.
வணக்கம் சென்னை - போயா வெண்ணெய்!
# படம் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கருத்து என்ன என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.
மதிப்பெண்கள் : 3/5