பெர்னார்ட்ஷா பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, சக மாணவர்கள் அவரை மட்டம் தட்டிக்கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்குப் பாடம் புகட்ட, சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார் ஷா.
ஒருநாள் வகுப்பாசிரியர், மாணவர்களைப் பார்த்து, ""உங்களில் சொர்க்கத்துக்குப் போக விரும்புகிறவர்கள் எழுந்து நில்லுங்கள்...'' என்றார்.
உடனே பெர்னார்ட்ஷாவைத் தவிர அனைவரும் எழுந்து நின்றனர்.
திகைத்துப் போன ஆசிரியர், ""உனக்கு மட்டும் சொர்க்கத்துக்குப் போக விருப்பம் இல்லையா?'' என்று ஷாவிடம் கேட்டார்.
அதற்கு ஷா, ""எனக்கும் போக ஆசைதான். ஆனால் இவர்களெல்லாம் சொர்க்கத்துக்குப் போன பிறகு, அது சொர்க்கமாகவா இருக்கும்..?'' என்று கேட்டார்.
அவரை மட்டம் தட்டிய மாணவர்கள் முகத்தில் ஈயாடவில்லை
.
-நா.பிரியதர்ஷினி, 9-ஆம் வகுப்பு, செஞ்சி.