Type Here to Get Search Results !

குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணும் குடும்பங்களின் கவனத்திற்கு...

0
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணும் குடும்பங்களின் கவனத்திற்கு | Storing food in fridge | listeria in stored food | health today | udal nalam | therindhukollungal
சமைத்த உணவை ஒரு வாரம் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணும் குடும்பங்களின் கவனத்திற்கு...

உணவின் மூலம் பரவும் "லிஸ்டிரியா" என்ற ஒரு நுண்கிருமி பல நாட்களாக குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள சமைத்த உணவில் வளரத் துவங்கும். அந்த உணவை உண்ணுபவர்களின் குடல் பாதைக்குள் நுழைந்து "லிஸ்டிரியோசிஸ்" என்ற நோயை உருவாக்கும். இதனால் அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற பல அறிகுறிகள் மட்டுமல்லாது சிறிது நாட்களில் குடலை பாழாக்கியதொடு நிறுத்தாமல் இரத்ததின் மூலமாக அருகிலுள்ள உறுப்புகளையும் தாக்கத் துவங்கும்.

இந்தக் கிருமியினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பம் தரித்த பெண்கள்.

லிஸ்டிரியா வளர்வதைத் தடுப்பதற்கான வழிமுறைகள்:

1. குளிர்சாதனப் பெட்டியில் வைத்த சமைத்த உணவை இரண்டு நாட்களுக்குள் உபயோகப்படுத்தி விட வேண்டும். உபயோகப்படுத்துவதற்கு முன் உணவை சூடாக்குவது மிக அவசியம்.

2. குளிர்சாதனப் பெட்டிக்குள் உள்ள வெப்பநிலை எப்போதும் 4°C கீழே இருத்தல் மிக முக்கியம். உறைவிப்பான் அடுக்கில் இருக்கும் வெப்பநிலை -18°C இருத்தல் வேண்டும். ஏனெனில் அந்த வெப்பநிலையில் லிஸ்டிரியாவினால் வளர முடியாது.

3. வாரத்துக்கு ஒரு முறை குளிர்சாதனப் பெட்டியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சிந்திய உணவுப் பொருட்களை உடனே அகற்றி துடைத்து விடுவதன் மூலம் கிருமி அதில் வளர்ந்து மற்ற உணவுகளில் பரவுவதை தடுக்கலாம்.

முடிந்த வரை.. அன்று சமைத்த உணவை அன்றே முடித்துவிடுங்கள்.. வியாதிகளை நாமே மாலைபோட்டு வரவேற்க வேண்டாமே..

@ நல்லதோர் வீணை செய்தே

குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணும் குடும்பங்களின் கவனத்திற்கு | Storing food in fridge | listeria in stored food | health today | udal nalam | therindhukollungal

குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணும் குடும்பங்களின் கவனத்திற்கு | Storing food in fridge | listeria in stored food | health today | udal nalam | therindhukollungal

கருத்துரையிடுக

0 கருத்துகள்